அங்கங்கே கூடுவீர்
அங்கமெங்கும் தொடுவீர் — கேட்டால்
பங்கமில்லை என்பீர்
சிங்கம் அவன் எனக்கு
தங்கம் அவள் எனக்கு என
வங்கம் எங்கும் பொங்குவீர்
நுங்குத் தண்ணீராய்
வாசப் பன்னீராய்
நேசக்காதல் — செந்நீர்
கூசப்புகுந்தது என்பீர்
பசிமுழுதும் பொறுக்க
நிசி முழுதும் விழித்து
குஷியாய் கதைத்து
ஆண் பெண் வாடையை
தொலைபேசியில் முகர்ந்து
கலை கூடத்திலும்
கலை பீடத்திலும்
சிலை, மாடத்தின் ஓரத்திலும்
நல்லார் வேடத்திலும்
பயிலும் பாடத்திலும்
மிதக்கும் ஓடத்திலும்
பூந்தோப்பிலும்
மாந்தோப்பிலும்
பழ ஆப்பிளும்
சில மரங்களின்
பாதுகாப்பிலும்
அடுத்தவருக்கும்
ஆன்றோருக்கும்
அன்னையருக்கும்
அஞ்சி அஞ்சி
கொஞ்சி செஞ்சு
எஞ்சியது என்ன?
பத்து மாதத்தில்
குஞ்சொன்றை
கொஞ்ச வேண்டி
வந்ததென்ன?
மங்கையர் காதலித்தாராம்
ஆடவர் கற்பழித்தாராம்
ஆண்டவன் அதனால் அன்பளித்தானாம்
குடும்பமானத்தை அழித்தானாம்
வாழ்க காதல்
வாழவேண்டிய
நங்கையரே ஏன்
அனாவசிய சாதல்
இது அவசரக்கூதல்
- மன்னாரமுது அஹ்னாப்
--------------------------------------------------
You gather here and there
you touch here and there — if asked
We aren’t doing anything wrong, you say.
He is a lion to me, she says
She is like gold to me, he says
overflowing with love.
Drinking love like water
sprinkling praise like rosewater.
This is true love, you say
blushing in shyness.
You ignore hunger
and stay awake past midnight
talking with ease.
The essence of man and woman
flows through the telephone.
In art galleries, and art faculties,
besides statues on balconies,
in plays and speeches and songs,
in floating movement,
through gardens and mango groves
among apples and the safety
of trees,
avoiding this or that person,
the strict elderly and mothers,
sharing stolen kisses
what is left?
What happens if a baby arrives
ten months later?
Women fall in love, men lust.
Love is God’s gift, but you
destroy your families.
Long live love.
But women, don’t ruin your lives
by acting hastily.
(Translated by Shash Trevett)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக