நானெனும் மமதை நமைக் கொள்ளும்
நாமெனும் பண்பே
நமைப் போற்றும்
எனதே எல்லாம் எனும் குணமும்
என்றும் அழிவை எமது
வழியாக்கும்
இயக்கம் இயங்கிடின் நமக்கிலை இடுக்கண்
இயங்கிடின் ஒற்றுமை
நமக்கது வேண்டும்
இயங்கியே ஒற்றுமை குழப்பிடும் கூட்டம்
இங்குதான் அதுவாழாதே
குறையது காணும்
ஊளையிடும்
குள்ளநரிக் கூட்டம் கண்டோம்
பேரதஎமதே எல்லாம் நமதே என்றேகூவி
பேரிலாப் போவதும்
கண்டது மெய்யே
வேண்டாம் வேண்டாம் நமக்குள் வாதம்
வடிவாய்ச் செய்பவர்
வாண்மை போற்றுவம்
மாண்டிடும் காலை மகத்துவம் தருவது
மண்ணில்
சேர்த்திடும் ஒற்றுமை ஒன்றே
பிறரை எள்ளி நகைத்திடும் கூட்டம்
பின்னும் பின்னும்
பின்னே செல்லும்
உறவை நாளும் பேணியே வாழ்ந்திடும்
உறவுகள் என்றும்
எமக்கே வேண்டும்
மண்ணில் உயர்வு தாழ்வினைப் பாரோம்
மனிதம் கொண்டே
எலோரும் வாழ்கென
கண்ணில் ஒற்றி கருத்தினில் வைப்போம்
கரையிலா மாந்தர்
நாளும் வாழ்ந்திட...
மாற்றான் புகழினை எட்டி உதைத்திடும்
மாசுப்பாதம்
அழித்திட வந்திடுக இன்றே
கூற்றமாய் குவலயத்து மனிதன் வாழ்ந்திட
குணக்குன்றா வானோ
மனிதன் சொல்லும்
வீழ்ந்திட வூரும் வீழ்ந்திட மக்களும்
வேண்டாக் கருமங்க
ளாற்றிடும் மாக்கள்
சூழ்ந்திடப் பலிகள் சூழ்ந்தே நிற்பர்
சூனியந்தானே
வேண்டாம் தீதினை நீப்பீர்!
தெரிந்தது தெளிந்தே தீதிலா துரைத்தனன்
தெவ்வராய்க் காணா தருமை
காண்பீர்
புரிந்தே மற்றவர் புண்படா துள்ளம்
பணிந்தே வாழ்வோம்
பக்குவம் மிகுந்திடும்!
-மதுராப்புர, கலைமகன் பைரூஸ்
21.02.2025
(அனைவருக்கும் உலக தாய்மொழித்தின வாழ்த்துகள்!)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக