அதிபரெம் ஹிப்ளர் அறிவோம் நாமே
காழ்ப்பின் றியேநிறைந் தேயுள்ளார் கேளீர்
அஸ்ஸபா அகிலமெங் கனுந்தான் பேசலாச்சே
திட்டந் தானொழுங் காய்ப் போட்டார்
திக்கெட் டும்புகழ் சேர்த்தார் ஸபாவினில்
இட்டமாய் இன்பணி தான்செய் தாரே
இதயங் களில்நின் றேயுள் ளாரதிபர்
கல்வியும் காணியும் ஔிரலாச் சுண்மை
கவனமெல் லாம்கல் லூரியி லாச்சே
பல்கலை மாணாக் கர்க்கரங் களிலாச்சு
ஈந்தபண் பாட்டினால் எல்லாம் ஆச்சே
நீள்பணி தான்புகழ் வதெங்ங னமோநாம்
சிந்தை யெங்கும் ஹிப்ளர் அதிபரே
மதுராப் புரவூ ருக்கும் புகழ்சேர்த்(தார்)
மங்காப் பெரும்பணி மகிழ்வொடு செய்தார்
கதிரவ னொளியாய் அஸ்ஸபா சுடர்வீ சிடவே
கரையா பணிகள் பல்லா யிரம்செய்(தாரே)
பணிநிறை வின்பின் னரும்பணி செய்தவர்
பணிநிறை வினைஏத் துவம்நாமே விரைவில்
அணிசேர்த் தவர்புகழ் ஏடுகள் ஏந்திடும்
இறையிடம் இறைஞ்சினன் நலம்வாழ இருமை!
-மதுராப்புர, கலைமகன் பைரூஸ்
(பாடசாலைப் பழைய மாணாக்கன்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக