It It கலைமகன் கவிதைகள்: எதுவுண்டு சொல்? Meta Tag Generator Tool By digitalyworld.in Instructions: Simply copy the following lines of code and insert them Between the and tags in your HTML Document. Enjoy from digitalyworld.in

செவ்வாய், 4 மார்ச், 2025

எதுவுண்டு சொல்?

நண்பன் மெய்யன் நடராஜின் அருமந்த கவிதைகளில் ஒன்று. வாசித்துத்தான் பாருங்களேன் நீங்களும்....

--------------------------------------------------

தேனாட மலருண்டு தீயாட விளக்குண்டு

திருந்தாதார் தானாடத் தெருவுண்டு
மீனாட விழியுண்டு முகிலாட வானுண்டு
முளைக்காத விதையாட நிலமுண்டு
கானாட மயிலுண்டு கனியாடக் கிளையுண்டு
கதிராட நீர்கொண்ட வயலுண்டு
தானாடா விட்டாலும் சதையாட லதுவுண்டு
தன்னலங்க ளில்லாதா ரெவருண்டு?
*
அலையாட கரையுண்டு அணிலாடக் கிளையுண்டு
அதிகாலைப் பனியாடப் புல்லுண்டு
இலையாட மரமுண்டு இரவாட நிலவுண்டு
இடியாடிச் சாய்த்தற்கு மரமுண்டு
உலையாட நெல்லுண்டு உளியாடக் கல்லுண்டு
உறவாட இலவசமாயப் பகையுண்டு
வலையாடக் கடலுண்டு வருவாயு மதிலுண்டு
வரவோடே செலவாடி வருவதுண்டு.
*
கிழக்காடக் கதிருண்டு கிழடாடக் கூனலுண்டு
கிளைதாவக் குரங்குகளு மேயுண்டு
முழமேற சாணிறங்கும் முடிவுகளு மிங்குண்டு
முன்னேற வழிபலவு மேயுண்டு
கழன்றுருளும் சில்லுகளால் கண்ணீரா றுகளுமுண்டு
கனவுகளை ஆதரிக்கக் காதலுண்டு
உழவாளர் சிந்துகின்ற உயர்வான வியர்வைக்கு
உருப்படியா யிங்கெதுதா னுண்டோசொல்?
*
மெய்யன் நடராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக