🌿போர் நடுவே மனிதம்” 🌿
வானில் வந்தான் தீயின் தூதனாய்,
வெடிக்கும் இரவின் நிழலாய்…
அழிக்கவே வந்தவன் என்று நினைத்தோம்,
வெடிக்கும் இரவின் நிழலாய்…
அழிக்கவே வந்தவன் என்று நினைத்தோம்,
ஆனால் இன்று -
அவன் அமைதியின் நடுவே அமர்ந்திருக்கிறான்.
கைகளில் கட்டுகள் இல்லை;
கண்களில் பயம் இல்லை;
அவன் முன் பரிமாறப்படும் அன்னத்தில்,
எதிரியின் கைகள் அல்ல -
மனிதத்தின் இதயம்தான் தெரிகிறது.
ஒரு விரிப்பு…
ஒன்றான அமர்வு...
ஒரு குடும்பம்…
ஒரு பகல் உணவு…
அதில் எல்லைகள் கரைந்துவிட்டன.
சிரிக்கிறான் அவன் -
அது வெற்றிச் சிரிப்பா?
அல்லது,
“நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன்”
என்ற நன்றியா?
ஒன்றான அமர்வு...
ஒரு குடும்பம்…
ஒரு பகல் உணவு…
அதில் எல்லைகள் கரைந்துவிட்டன.
சிரிக்கிறான் அவன் -
அது வெற்றிச் சிரிப்பா?
அல்லது,
“நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன்”
என்ற நன்றியா?
என் உள்ளம் கேட்கிறது -
'போர் யாருக்காக?
இந்த அன்பு யாருக்காக?'
குண்டுகள் பேசும் உலகில் கூட,
ஒரு அன்னம்
மனிதத்தை காப்பாற்றுகிறது;
ஒரு சிரிப்பு
எல்லா அரசியலையும் மீறுகிறது.
இன்று நான் உணர்கிறேன் -
எதிரி என்ற சொல்லுக்கு அப்பால்,
நாம் எல்லோரும் ஒரே உயிர்கள்…
- தமிழன்புடன், கலைமகன் பைரூஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக