ஏழ்மையொடு ஒட்டிப் பிறந்திட்டோம்
ஏற்றமிலாச் சாதியில் பிறந்திட்டோம்
கூழின்றி குடும்பமே நட்டாற்றி லிருப்பதனால்
கொடுமைகள் பலசுமந்து துன்பத்தில்நாம்!
கற்றுத்தேர்ந்திட பள்ளிசென்றிட ஆசை
கயவர்கண்கள் குருடனதால் நாமிங்கே
முற்றும் துறந்துமுட்களிடை யேயின்று
முனிந்துமுனிந்து வேலைசெய்கின்றோம்!
கேள்வியுற்றோம் செவிகளுக்குள் – இடியெனவே
மடைதிறந்த வெள்ளமென விழிநீரெங்கும்
மரித்துயிர்த்து மரிக்கின்றோம் நாமிங்கு!
கல்லுடைத்தும் கல்சுமந்தும் பால்யர்நாம்
கனிவின்றிய சொற்களுடு வாழ்வதற்காய்
சொல்லுகின்ற வன்செயல்கள் செய்கின்றோமே
சொர்க்கத்தில் உறங்குகின்றார் உயர்சாதி!!
மானுடநீதி பேசுகின்ற ஊழைகேட்டோம்
மனிதமின்றிய மானுடத்தின் அழகும்கண்டோம்
ஊனின்றி உடையின்றி தவிப்பதாலேநாம்
உண்டியொரு கவழத்திற்காய் மாடாயின்று!
எமக்கென ஒருதின மெடுக்கின்றார்
ஏற்றமிலா எமைக் காணாதிருக்கின்றார்
சுமக்கின்ற சுமைகளால் சிறுமைநீங்கி
சயனமின்றி யொருபோதும் அழுக்காய்நாம்!
சொப்பனங்கள் உண்டு சிறுவ ரெமக்குள்ளும்
சென்றிட வழியின்றி முட்களுக்குள்நாம்
நப்பாசையிலா சிறுவர்நாம் என்றபோதும்
நகைகாட்டா மானுடமென்ன மானுடமோ?
அழகான மேனியெங்கும் அசிங்கமாக –இவர்
அழுக்குகளே உதிரமீதும் ஓடுதிங்கு
பழக்கமிலை பணிகளிவர் என்றபோதும்
பணிந்தேசெய்கின்றோம் – பிறந்த்துதப்பா?
வடிகின்ற வியர்வையெங்கும் கொதிநீராக
வன்மனது தருகின்ற கொடுமையாலே
துடிக்கின்றோம் அனலிடை புழுவெனநாம்
தூங்குகின்ற தூயவர்கள் எங்கே? பாரும்!!
நிலைகெட்ட வலியாரின் கண்களெங்கே?
நிலைகெட்டுப் போகின்றோம் சிறுவர்நாமே
விலைபோகும் மனிதத்தின் விலையிறக்கி
வித்திடுங்கள் “சிறுவர்” விதைகளெங்கும்!!
-கலைமகன் பைரூஸ்
இலங்கை
நன்றி
# எம்.இஸட்.எம். பைஸான்
# ஒருநாள் ஒருகவிதை
padamum umathu varigalum mana valiyai kodukirathu kalai
Bubalan Bubalan · Friends with Aiadmk Tamil Nadu
kattru therdhida palli sendrida aasai kayavar kan kurudaam unmai unmai unmai....................
Jancy Caffoor
சிறுவர் விதைகளின் கண்ணீர் உரங்கள், மனதில் வார்க்கும் சோக ஈரலிப்பை..............................
யதார்த்தங்களை கவி வரிகளில் தொட்டுக் காட்டியுள்ளீர்கள்
Mufliheen Ahamed
'சொப்பனங்கள் உண்டு சிறுவ ரெமக்குள்ளும்
சென்றிட வழியின்றி முட்களுக்குள்நாம்!'
இதயத்தில் முட்களாக இவ்வரிகள்!
Thava Parames கொடைகொடுக்கும் வள்ளல்கள் உண்டாமிங்கு
கேள்வியுற்றோம் செவிகளுக்குள் – இடியெனவே
மடைதிறந்த வெள்ளமென விழிநீரெங்கும்
மரித்துயிர்த்து மரிக்கின்றோம் நாமிங்கு!
30/10/2012
Krishnasamy PonnusamyNenchu porukkuthilaye...............
30/10/2012
நன்றி
# எம்.இஸட்.எம். பைஸான்
# ஒருநாள் ஒருகவிதை
கருத்துரைகள்
Bubalan Bubalan · Friends with Aiadmk Tamil Nadupadamum umathu varigalum mana valiyai kodukirathu kalai
Bubalan Bubalan · Friends with Aiadmk Tamil Nadu
kattru therdhida palli sendrida aasai kayavar kan kurudaam unmai unmai unmai....................
Jancy Caffoor
சிறுவர் விதைகளின் கண்ணீர் உரங்கள், மனதில் வார்க்கும் சோக ஈரலிப்பை..............................
யதார்த்தங்களை கவி வரிகளில் தொட்டுக் காட்டியுள்ளீர்கள்
Mufliheen Ahamed
'சொப்பனங்கள் உண்டு சிறுவ ரெமக்குள்ளும்
சென்றிட வழியின்றி முட்களுக்குள்நாம்!'
இதயத்தில் முட்களாக இவ்வரிகள்!
Thava Parames கொடைகொடுக்கும் வள்ளல்கள் உண்டாமிங்கு
கேள்வியுற்றோம் செவிகளுக்குள் – இடியெனவே
மடைதிறந்த வெள்ளமென விழிநீரெங்கும்
மரித்துயிர்த்து மரிக்கின்றோம் நாமிங்கு!
30/10/2012
Krishnasamy PonnusamyNenchu porukkuthilaye...............
30/10/2012
//சுமக்கின்ற சுமைகளால் சிறுமைநீங்கி
பதிலளிநீக்குசயனமின்றி யொருபோதும் அழுக்காய்நாம்!
சொப்பனங்கள் உண்டு சிறுவ ரெமக்குள்ளும்
சென்றிட வழியின்றி முட்களுக்குள்நாம்
நப்பாசையிலா சிறுவர்நாம் என்றபோதும்
நகைகாட்டா மானுடமென்ன மானுடமோ?//
மிக நீண்ட நாட்களுக்குப்பின் நல்லதொரு கவிதையைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள் கலைமகன்.
A. Shinthaamani
very nice poem.
பதிலளிநீக்குk. baalamurugan
india
உங்கள் வலைதளத்தை மேலும் பிரபலப்படுத்த , மற்றும் அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை தமிழ்10 .காம் தளத்துடன் இணைத்துக் கொள்ளுங்கள் .
பதிலளிநீக்குபதிவுகளை இணைக்க இங்கு செல்லவும்
நன்றி
தமிழ்10.காம் குழுவினர்
விழி கசிய வைக்கும் நிதர்சனக் கவிதை நண்பரே.
பதிலளிநீக்கு