It It கலைமகன் கவிதைகள்: கவினுறு கலைகள் வளர்ப்போம்! Meta Tag Generator Tool By digitalyworld.in Instructions: Simply copy the following lines of code and insert them Between the and tags in your HTML Document. Enjoy from digitalyworld.in

செவ்வாய், 1 ஜனவரி, 2013

கவினுறு கலைகள் வளர்ப்போம்!






கவினுறு கலைகள் வளர்ப்போம் – நாம்
கருத்தினிற் கினிய படைப்போம்
வியனுறு பணிகள் செய்வோம் – நாம்
வறுமை அழிந்திடச் செய்வோம்!

புவியுடு மடைமைகள் அழிப்போம் – நாம்
பூதலம் செழித்திடச் செய்வோம்!
கவியுடு அறிவியல்  வளர்ப்போம் – நாம்
கவினுறு காவியங்கள் செய்வோம்!

நலமொடு மனிதத்தை வளர்ப்போம் – புவி
நனிசிறந்திட ஏட்டினை ஏந்துவம்
பலகைகள் சேர்ந்திடச் செய்வோம் – புவி
பந்தத்தில் சுழன்றிடச் செய்வோம்!

சிலகை உயர்ந்திடல் அழிப்போம் – புவி
சிறந்திட நாமெனும் தன்மை செய்வம்
உலகை வெறுக்கை எனக்கொள்வோம் – புவி
உயர்ந்திட புதுவழி நாம்செய்வோம்!

பொறாமை அழித்திடல் செய்வோம் – நாம்
புதுமை படைத்திட செம்மை செய்வம்
நிறமை அழித்திடல் செய்வோம்  - நாம்
நேர்மை சேர்ந்திடச் செய்வோம்!

அறியாமையொடு கல்லாமை ஏழ்மை – நம்
அகிலத்தில் அழிந்திடச் செய்வோம்
வறுமையும் மடமையும் அழிப்போம் – நம்
வாழ்வினில் பொய்மை அறுப்போம்!

புதுப்புது கலைகள் காண்போம் – நம்
பைந்தமி ழணங்கினை வளர்ப்போம்
விதவித வித்தைகள் செய்வோம் – நம்
வாழ்வியல் வசந்தம் காணச் செய்வோம்!

வஞ்சக மனதினை நீத்திடல் செய்வோம்
வறுமை யழிந்திட வழிவகை செய்வோம்
நெஞ்ச மெங்கனும் நாமை வளர்ப்போம்
நேர்மை ஒன்றை மறையெனக் கொள்வோம்!
2013/01/01 01:01

நன்றி:
1. மக்களின் குரல் http://www.makkalinkural.com/2013/01/blog-post_3726.html
2. மெட்ரோ நிவ்ஸ்
3. தினகரன் வாரமஞ்சரி

கருத்துரை:
--------------------
மாஷா அல்லாஹ் மிக அருமையான கருத்துள்ள பதிவு
//வஞ்சக மனதினை நீத்திடல் செய்வோம்
வறுமை யழிந்திட வழிவகை செய்வோம்
நெஞ்ச மெங்கனும் நாமை வளர்ப்போம்
நேர்மை ஒன்றை மறையெனக் கொள்வோம்!// மனிதன் மனிதனாக இவை அனைத்தையும் வளர்த்துக்கொள்வது மிக அவசியம்
2013/01/01 

கவியன்பன் கலாம்
அல்லாஹ்வுக்கு அவர்கள் எழுதும் அஞ்சலாக,
அரபுமக்கட்கு வேண்டிக் கொள்ளும் கெஞ்சலாக
அபாபீல் பறவைகளாய் ஆலயத்தை நோக்கி
அன்பும் அரவணைப்பும் அவர்களிடம் தேக்கி
மடலாய் வந்து மனத்தினில் ஈரத்தை வடித்து
உடலையும் ஒவ்வொரு அணுவாய்த் துடித்து
வைத்து விட்டாய் சகோதரா!
தைத்து விட்டாய்ய்... 

2013/01/01


சபாஷ்

Kalaimahel Hidaya Risvi 
அருமையான பதிவுவாழ்த்துக்கள் தம்பி ஆழமான வரிகள் ஊர்றேடுக்கட்டும் ..

ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா
//புதுப்புது கலைகள் காண்போம் – நம்
பைந்தமி ழணங்கினை வளர்ப்போம்
விதவித வித்தைகள் செய்வோம் – நம்
வாழ்வியல் வசந்தம் காணச் செய்வோம்!//

********* அருமையான பதிவு!! வாழ்த்துக்கள்!!
//வஞ்சக மனதினை நீத்திடல் செய்வோம்
வறுமை யழிந்திட வழிவகை செய்வோம்
நெஞ்ச மெங்கனும் நாமை வளர்ப்போம்
நேர்மை ஒன்றை மறையெனக் கொள்வோம்!//


Ehamparam Ravivarmah 
மிகப்பெறுமதியான புதுவருட சபதம்

Lucia Coonghe 
அருமை வரிகள்.செயலாற்றப் படுமா?

அருமையான வரிகள்.... வெறும் வரிகளாய் மட்டும் இருக்காமல் வழக்கத்தில் வந்தால் உள்ளத்தில் மகிழ்ச்சி நிச்சயம் .

''..புவியுடு மடைமைகள் அழிப்போம் – நாம்
பூதலம் செழித்திடச் செய்வோம்!
கவியுடு அறிவியல் வளர்ப்போம் !..''' --வளர்ப்போம்! Nalvaalthu!...

//பொறாமை அழித்திடல் செய்வோம் – நாம்
புதுமை படைத்திட செம்மை செய்வம்
நிறமை அழித்திடல் செய்வோம் - நாம்
நேர்மை சேர்ந்திடச் செய்வோம்!//

பொறாமை ஒன்றுதான் பல பிரச்சினை உருவாக்குகிறது சேர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக