பேய் தேசத்து
பிரேதங்களின்
பின்னிரவு
பிரளயமாய்
உணர்வுகளும்
உரிமைகளும்
பெரும்பான்மையின்
விக்கலுக்கு
விருந்தாகப் பார்க்கிறது
ஜன நாயகம்
விழி பிதிங்கி
மொழி நடுங்கிக் கிடக்கிறது
பழமிருக்க
மலம் தேடும்
காகங்கள் போல
மதவாதம்
மகுடி இசைக்க
சிறுபான்மை எனும்
சிட்டுக் குருவிகள்
பேய் தேசத்தில்
வாழ்ந்தும்
வாழாமலும்
இறந்தும்
இறக்காமலும் !!
பிரகாசக்கவி
எம்.பீ அன்வர் - —
nanri kalai makan
பதிலளிநீக்கு