-கலைமகன் பைரூஸ்
பலநூற்றாண்டு வரலாறு உனதாகும் மகனே
பார்த்திருக்க மாட்டாது ஊளையிடுது இங்கே
நிலந்தேயு மட்டும் கூக்குரலிட்டாலும் மகனே
நில்லாதே நீண்ட பயணம் நீதொடரு நேரே!
வாசங்கள் பலசொல்லி பூண்டோடு அழிக்க
விண்ணதிரும் பொய்மைகள் பலசுமந்து இன்று
நாசங்கள் தான்புரிவோர் நில்லாமற் செய்ய
நிலத்தினில் உயர்ந்தோர் நாமென்று வருகின்றார்
தகுந்தது தகாததேது என்று அறியாமலின்று
தரமான நல்லவற்றை அழித்து சாம்பராக்கி
மிகுந்தோர் நலங்கள் நாமென்று ஊளையிட
மேலாண்மை செய்வோர் உடந்தையாய் நிற்பர்
பெண்மையை காத்திட நல்லன நீஇயற்ற
பேதைமையொடு பார்க்கின்றான் அழிவேவர
உண்மை யேதென்று அறியாமல் கூக்குரலிடும்
உதவாக்கரைகளுக்கு அஞ்சாதே நீநட மகனே!
நமதுநிலம் இதுவென்பார் மற்றோரை யழிப்பார்
நலமே இலாதன நாளும்சொல்வார் அழிந்திடுவார்
எமது நிலமும் இதுவென்று நீயோது அஞ்சாதே
எமக்கான வாழ்வு அருகுளதை நீசெப்புநேராய்!
மற்ற0வர்க்கு மரியாதை ஏதும்செய்யார் குரைப்பர்
மற்றவரின் உணர்வுகளை ஏறிட்டும் நோக்கார்
குற்றங்கள்தான் புரிவார் குவலயம் அழியுமட்டும்
குரைப்போரெல்லாம் மேலெழுவரோ இலவேயிலை!
ஊடகமும் ஊரவரும் கல்வி வல்லாரும்
உம்மென்று இருக்கின்றார் நரிகள் ஊளையிட
நாடகமே நிலமெங்கும் நரசிங்கங்கள் பாரும்
நாதியற்றவன் நானென்று அஞ்சாது மகனே!
நித்தமும் சத்தியத்தை நீ உரைப்பாய்
நற்பண்புகளால் இனத்தையே நீபகர்வாய்
சத்தியம் இதுதானென்று உணருமட்டும் நீ
சாந்திவழியில் தொடரு இதுதான்வழிஎன்று
மறைத்தலின் மகிமையை மேலேசொல்லு
மதிப்பிலை மறைக்காத பொருள்க்கு என்று
உரைத்திட நீஇயற்று பலநூறு பாக்கள்சீராய்
உண்மை உணருங்கால் அப்படியா என்பார்
வீண்வம்பை விலை கொடுத்து வாங்காதே
வேண்டாத குதர்க்கங்கள் நீ மேலேபேசாதே
புண்கொண்ட நெஞ்சம் எம்மவ ரென்றாலும்
பதறாதே சிதறாது எல்லாம் நல்லனவாய்ஆம்!
வாழ்ந்துகாட்டு வாழக்காட்டு வாழ்வைக்காட்டு
வஞ்சமில்லா நெஞ்சத்தார் நாமென்று காட்டு
சூழ்ந்துவருவார் சுமைதாங்கி ஆகநின்று பாரில்
சுத்தமான சத்தியத்தை சேர்ந்து காட்டு சுடர்வர்!
--கருத்துரைகள்--
பலநூற்றாண்டு வரலாறு உனதாகும் மகனே
பார்த்திருக்க மாட்டாது ஊளையிடுது இங்கே
நிலந்தேயு மட்டும் கூக்குரலிட்டாலும் மகனே
நில்லாதே நீண்ட பயணம் நீதொடரு நேரே!
வாசங்கள் பலசொல்லி பூண்டோடு அழிக்க
விண்ணதிரும் பொய்மைகள் பலசுமந்து இன்று
நாசங்கள் தான்புரிவோர் நில்லாமற் செய்ய
நிலத்தினில் உயர்ந்தோர் நாமென்று வருகின்றார்
தகுந்தது தகாததேது என்று அறியாமலின்று
தரமான நல்லவற்றை அழித்து சாம்பராக்கி
மிகுந்தோர் நலங்கள் நாமென்று ஊளையிட
மேலாண்மை செய்வோர் உடந்தையாய் நிற்பர்
பெண்மையை காத்திட நல்லன நீஇயற்ற
பேதைமையொடு பார்க்கின்றான் அழிவேவர
உண்மை யேதென்று அறியாமல் கூக்குரலிடும்
உதவாக்கரைகளுக்கு அஞ்சாதே நீநட மகனே!
நமதுநிலம் இதுவென்பார் மற்றோரை யழிப்பார்
நலமே இலாதன நாளும்சொல்வார் அழிந்திடுவார்
எமது நிலமும் இதுவென்று நீயோது அஞ்சாதே
எமக்கான வாழ்வு அருகுளதை நீசெப்புநேராய்!
மற்ற0வர்க்கு மரியாதை ஏதும்செய்யார் குரைப்பர்
மற்றவரின் உணர்வுகளை ஏறிட்டும் நோக்கார்
குற்றங்கள்தான் புரிவார் குவலயம் அழியுமட்டும்
குரைப்போரெல்லாம் மேலெழுவரோ இலவேயிலை!
ஊடகமும் ஊரவரும் கல்வி வல்லாரும்
உம்மென்று இருக்கின்றார் நரிகள் ஊளையிட
நாடகமே நிலமெங்கும் நரசிங்கங்கள் பாரும்
நாதியற்றவன் நானென்று அஞ்சாது மகனே!
நித்தமும் சத்தியத்தை நீ உரைப்பாய்
நற்பண்புகளால் இனத்தையே நீபகர்வாய்
சத்தியம் இதுதானென்று உணருமட்டும் நீ
சாந்திவழியில் தொடரு இதுதான்வழிஎன்று
மறைத்தலின் மகிமையை மேலேசொல்லு
மதிப்பிலை மறைக்காத பொருள்க்கு என்று
உரைத்திட நீஇயற்று பலநூறு பாக்கள்சீராய்
உண்மை உணருங்கால் அப்படியா என்பார்
வீண்வம்பை விலை கொடுத்து வாங்காதே
வேண்டாத குதர்க்கங்கள் நீ மேலேபேசாதே
புண்கொண்ட நெஞ்சம் எம்மவ ரென்றாலும்
பதறாதே சிதறாது எல்லாம் நல்லனவாய்ஆம்!
வாழ்ந்துகாட்டு வாழக்காட்டு வாழ்வைக்காட்டு
வஞ்சமில்லா நெஞ்சத்தார் நாமென்று காட்டு
சூழ்ந்துவருவார் சுமைதாங்கி ஆகநின்று பாரில்
சுத்தமான சத்தியத்தை சேர்ந்து காட்டு சுடர்வர்!
--கருத்துரைகள்--
Pena Manoharan
’வாழ்ந்து காட்டு வாழக்காட்டு வாழ்வைக் காட்டு’அருமை.அற்புதம்.வையையின் வாழ்த்துக்கள்.
Hamdun Rafi
graat kalaimahan fairoos
Vetha ELangathilakam Nalvaalththu.
நன்றி - “விடிவெள்ளி” வியாழன் 12-06-2014 ப. 18 (http://www.vidivelli.lk/epaper/12-06-2014/Page18.html)
திக்குவல்லை ஸப்வான்
“மிகச் சிறப்பாக - காலத்திற்கேற்றாற் போல இருக்கின்றது.. சிறப்பான வாழ்த்துக்கள்”
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக