It
It
கலைமகன் கவிதைகள்: அடி நிர்வாணம் காட்டலாமோ?
Meta Tag Generator Tool By digitalyworld.in
Instructions: Simply copy the following lines of code and insert them Between the and tags in your HTML Document. Enjoy from digitalyworld.in
அடி நிர்வாணம் காட்டலாமோ?
துச்சாதனர்கள் இன்று உப்பரிகையில் நின்று துச்சமாய் பெண்டிரின் நிர்வாணம் கண்டிட உச்சாணி நிற்கின்றார் அதுகண்டு -பெண்ணே உன் நிர்வாணம் காட்டிட நீமுனைவது தகுமோ? தாய்க்கும் தன்னொடு பிறந்த தமியளுக்கும் தரமேதன்ற றியா ஈனர்களின் குடல்கொய்து நாயிழிசனம் இவனென்று காட்டவேண்டாமோ நாதியிலாமற் செய்திட வேண்டாமோ நீ? அசிங்கம் இவன் உன்னாடையில் கைவைக்க அசிங்கம் நீ திறந்து காட்டலாமா உனைநீ அசிங்கம் களைந்திட சிங்கமாய் மாறிநீ அவனைக் கடித்துக் குதறு கரும்புலியாய் மாறி! மறைத்தலின் அழகினை சொல்ல மறுக்கிறாய் மறுதலிப்பதில் எனக்கிலை பிரச்சினை பெண்ணே மறைத்தலை நீக்க முயல்வானின் குடலுரித்து மாலையாய் உன்கழுத்தில் நீயிட வேண்டாமோ? நேயமே இலாத இனவாதம் பேசியலையும் நீசர்களை மறைத்த விரலால் ஊண்டிக் கிழிநீ கையாவைத்தாய் நீ எனக்கேட்டு காரித்துப்பு காடையனை காரிகை நீயழித்தாய் எனக்காட்டு! பேதமையால் நீசொன்னவை போதும்பேதைநீ பொறுத்தது போதும் பொங்கியெழு - மாறாய் பிடைவை நீக்கி நிர்வாணம் காட்ட முயலாதே பிண்டமா நீ ? யுத்தத்தில் இறங்கு வேங்கைநீ! இனியாரும் வாராதே இதுதான் கதிஎனக்காட்டு இழிச்ச வாயர் நாமிலை எனக்காட்டு கனிமொழி பேசுவம் கத்தியையும் ஏந்துவம் காரிகையர் நாமெனக் காட்டு உனைக்காட்டாது! ஆண்மை பற்றிப் பேசாதேயவன் ஆண்மை அழித்திடு வீரவேங்கையாய் மாறி - நிர்வாணம் கண்டிட வந்தாயோ பார்நிர்வாணம் உனதென காட்டிக் காறித்துப்பு காடையரை அழிநீ! உண்மை யறியாது மேலாடை நீக்க வந்தாயோ உன்தாயும் பெண்ணே யெனக்காட்டு கீறி மண்ணைக் கவ்விடச் செய்திடு - மாறாய் மறைக்கும் உன்நிர்வாணம் காட்டாதே - சீச்சீ! பாவையர் அழகு மறைத்தலில் எனக்காட்டு பெறுமதி மறைத்தலில் எனப்புகட்டு பார்க்கு தேவையிலாது காமப்பசியுடன் வந்திட நாம் தரணியில் வேரறுத்திடுவம் நீசர்களை யென்பாய்! எல்லாமும் சொல் அழித்தொழி பாரினின்று ஏதிலாரை குதறி அவன் இரத்தம்தோய்த்து எல்லாரும் வாருங்கள் இனியும் மேலாடைநீக்க என்று கத்து போராவேசத்துடன் அழிந்திடஅநீதி! -கலைமகன் பைரூஸ் 2013/03/24 2:03
(சகோதரி அஷ்ரபா நூர்தீன் 'இலங்கை நெற்'றில் எழுதியிருந்த 'ஒரு முஸ்லிம் பெண்ணின் வாக்குறுதி' கவிதைக்கான பதில் கவிதை!)
இலங்கை நெற் றில் : அஷ்ரபா நூர்தீனின் கவிதை கண்டிட
http://www.ilankainet.com/2013/03/blog-post_8009.html
==கருத்துரைகள்==
Kesavan Ranganathan
Sham Salam
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக