தனயன் தன்னை தயாளனுக்காய் – நபி
தந்திட முனைந்த நந்நாள் இந்நாள்
பண்ணுவோம் அவர்வழி நல்லன நாம்
பாரினில் களைவோம் தீய சிந்தைதான்!
இறையின் கடமை வந்தது நம்மவர்
இறையில்லம் ஏகினர் புனிதம் பெற்றிட
மறையிறையின் முன் மண்டியிட்டு பாவம்
மறைந்தழித்து வருவோரையும் ஏத்துவோம்..!
ஹஜ்ஜினின் அறுத்திடுவோம் நாமும் உள்
கல்பினில் சூடிய கறையை இத்தினம்
ஹஜ்ஜின் வாழ்த்துகள் சொன்னேன் எலோர்க்கும்
‘அல்லாஹு அக்பர் முழக்கம்’ அன்னதாய் நான்!
-தமிழன்புடன்
இஸ்மாயில் எம். பைரூஸ்
(கலைமகன் பைரூஸ்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக