It It கலைமகன் கவிதைகள்: தினகரன் வாரமஞ்சரியில் வெளியான 'நிழலும் நிதர்சனமும்'பற்றிய நயவுரை Meta Tag Generator Tool By digitalyworld.in Instructions: Simply copy the following lines of code and insert them Between the and tags in your HTML Document. Enjoy from digitalyworld.in

செவ்வாய், 8 அக்டோபர், 2013

தினகரன் வாரமஞ்சரியில் வெளியான 'நிழலும் நிதர்சனமும்'பற்றிய நயவுரை

சென்ற ஞாயிற்றுக்கிழமை (06/10/2013) தினகரன் வாரமஞ்சரியில், இலங்கையின் பிரபல ஆங்கில - தமிழ் திறனாய்வாளரும், பத்தியெழுத்தாளருமான உயர்திரு. கே.எஸ். சிவகுமாரன் ஐயா அவர்கள் எனது 'நிழலும் நிதர்சனமும்' கவிதைத் தொகுப்பைப் படித்து நயவுரை எழுதியிருந்தார்.

எனை விஞ்சிப் போற்றி, என் தமிழில் நான்
வைத்துள்ள மதிப்பைப் போல தமிழுலகும் கண்டுகொள்வதற்காய் எனை ஏத்திப் பேசியிருந்தார். என் கவிதைகளைக் கோடிட்டுக் காட்டியிருந்தார்...

அவருக்கு எனது நன்றிப் பூத்தூவல்கள்....

அன்றைய தினம் தினகரன் வாரமஞ்சரியில்தான் நான் அந்தக் பத்தியெழுத்தைக் கண்டேன். அன்று தினகரன் இணையப்பக்கத்தில் கட்டுரை என் கண்களில் படவில்லை. என்றாலும்,

உயர்திரு செந்தில் வேலவர் அவர்கள் கட்டுரை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள இணையப்பக்கத்தின் இணைப்பையும், கட்டுரையையும் எனக்கு அனுப்பி வைத்திருந்தார்.

அவருக்கும் எனது உளத்து எழுந்த நன்றிப் பூத்தூவல்கள்....

கூடவே, எனை வளர்த்த தினகரன், 'சிறுவர் உலகம்' தயாரிப்பாளர் ஆனந்தி அவர்களுக்கும் நான் என்றும் கடப்பாடுடையேன்....

இதோ ஐயா கே.எஸ். சிவகுமாரன் எனைச் சொல்லிய கட்டுரையும், இணையவழி இணைப்பும்:


நிழலும் நிதர்சனமும்


தென் இலங்கையில் வெலிகம என்ற சிறுநகரமொன்று இருப்பதை நாமறிவோம். அந்தப் பிராந்தியத்தில் தெனிப்பிட்டிய, மதுரப்புர என்ற இடத்தில் தமிழ் அறிவகம் என்ற இல்லத்தில் இஸ்மாயில் எம். பைரூஸ் என்ற கல்விமான் “கலைமகன் பைரூஸ் என்ற பெயரில் கவிதை உட்படப் பல எழுத்தாக் கங்களைத் தந்து கொண்டிருக்கிறார்.
கலைமகன் பைரூஸ் எழுதிய கவிதைகளின் தொகுப்பு “நிழலும் நிதர்சனமும்” என்ற பெயரில் வெளியாகியது. அந்தக் கவிதை நூலுக்கு மன்னாரைப் பிறப்பிடமாகக் கொண்ட மற்றொரு இஸ்லாமியக் கல்விமான் ஆன கலைவாதி கலீல் ஒரு முன்னுரையை எழுதியிருந்தார்.

அதிலே, “கவிதையொன்றைப் படைப்பதற்கு மிக அவசியமான இலக்கணக் கூறுகளான எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி போன்றவற்றை நன்கு கற்றுத் தெளிந்ததன் பின்னரே கலைமகன் கவிதை படைத்துள்ளார் என்பதற்குச் சான்று கூறும் பல கவிதைகள் இத் தொகுப்பில் காணப்படுகின்றன” எனக்கூறுகிறார்.

இது உண்மையே பைரூஸ் ஒரு பட்டதாரி. தமிழில் நன்கு பரிச்சயமான சொல்லேருழவர்.
இவர்கவிதைகள் தொடர்பாக வேறு சில சுவைஞர்களும் சான்றிதழ் வழங்கியுள்ளனர். திக்குவல்லை ஷப்வான், ஸெய்யித் ஹ¥ஸன் மெளலானா ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள்.

மர்ஹ¥ம் எம். எஸ். எம். ஷம்ஸ், எம். எஸ். பாஹிம், மானா மக்கீன், மர்ஹும் எம். ஏ. ரஹ்மான், ஆகியோரும் இவர் வளர்ச்சியில் பங்கெடுத்தனர்.

இவர் இதழியலாளராகவும் அனுபவம் பெற்றிருக்கிறார். எஸ். எச். நிஃமத் நடத்திய “இடி”, எம். பெளசர் நடத்திய “முஸ்லிம் குரல்”, “சுடர்ஒளி” ஆகிய பத்திரிகைகளில் பணிபுரிந்து போதிய அனுபவங்களைப் பெற்ற கலைமகன் பைரூஸ், தாமே ‘புத்தொலி’ என்று மாத சஞ்சிகையை நடத்தவும் முற்பட்டார்.

இவர் ஏன் கவிதைகளை எழுது கிறார் என்று அறிய முற்பட்டால், அவரே கூறுகிறார்.
“சமூதாயத்தில் பல அவஸ்தை களுக்கு நான் உள்ளாகியிருக்கின்றேன். அப்போதெல்லாம் ஆத்திரத்தைப் பிய்த்துக் கொண்டு எனக்குள் கவிதைகள் பிரசவமாகின்றன; ஏதேனும் ஒரு அவலத்தை நேரடியாகக் காணும்போது கவிதை எனையறி யாமலே பிய்த்துக் கொண்டு வருகின்றது. நானெழுதும் கவிதை களுக்கு நானே முதல் வாசகனாகி பலமுறை படித்து சுவையாயின் மாத்திரமே பத்திரிகைகளுக்கு அனுப்புவேன்”.

இவருடைய கவிதைகளிலொன்று “யாப்புக் கவிதையோடு புதுக்கவிதையும் கற்றேன். காரிகையுந் தண்டியலங்காரமும் சுவைத்தேன். ஒப்பிலாமணிகள் பலவுங்கற்றேன். ஆயின் ஒன்றெனக்கென கவியமைப்புந் தெளிந்தேன்”

கலைவாதிகலீல் கூறியிருப்பது போல், “உண்மையில் இவரது கவிதைகள், கவிதைக்கான இலக்க ணத்தைக் கொச்சைப்படுத்தாத வகையில் எழுதப்பட்டுள்ளமை கவனிக்கற்பாலது!
கலைமகன் பைரூஸ் எழுதிய கவிதைகளில் எனக்குப் பிடித்த சில வரிகளை மாத்திரம் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

“கருத்துச் சுதந்திரம் கம்பீர மெனக்கூறி காடைத்தனம் புரியும் காமுக வெழுத்தாளன்.
மடமை மல்ஹிமனிதம் மறைந்து மதுமாது மடைபெருகி, சோகமுகில் கலைந்துவிடும் காலம் வரும்,

விண்ணும் மண்ணும் வடிவமைந்த வல்லான் விடிவை யெறிந்திடும் வடிவிலா தோனாய்கள் மண்ணி னின்றும் மடிந்து வீழ்ந்திட, திருமண வீசா எடுத்து வரப்போகிறாய், மெளனிகளாக நீ உன்னளவில் நானும் என்னளவில் நீயும் எங்களுக்கு எல்லைக் கோடுகள் வயது எங்களுக் குள் வரையறை காணாத போதும் நீயும் நானும் மெளன கீதங்கள் சாந்தமாய் நிற்பாவனைப் பார்த்து சத்தில்லை யிவனிடம் எனச் சொல்லி சிந்தனை யறியாது கர்ச்சிக்கும் சிங்கங்களிவர்கள் குருத்தோலைகள், பால்பல் முளைத்த நாள் தொட்டு, விடிவுக்காக வாடிநிற்கும் விட்டில்கள் நாங்கள், நாளைய விடிவுக்காக ஏங்கி நிற்கும் நாடகமன்றத்தில் நசுக்கப்பட்டவர்கள் நாங்கள்.

கே. எஸ். சிவகுமாரன்

http://www.thinakaran.lk/Vaaramanjari/2013/10/06/?fn=f13100622

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக