It It கலைமகன் கவிதைகள்: தமிழுக்கு அணிசேர்க்கும் தரமான கவிஞனிவன் ...-எஸ். சித்தீக் Meta Tag Generator Tool By digitalyworld.in Instructions: Simply copy the following lines of code and insert them Between the and tags in your HTML Document. Enjoy from digitalyworld.in

புதன், 7 மே, 2014

தமிழுக்கு அணிசேர்க்கும் தரமான கவிஞனிவன் ...-எஸ். சித்தீக்



இன்று (05-05-2014) என்னைச் சந்திக்கவந்த சிலாவத்துறை ஆசிரியர் எஸ். சித்தீக் (முத்துச் சிலாவத்துறை புதுமை மைந்தன்) எனக்கு அன்பாக அளித்த கவிதை இது...

கவிதை கண்டு
புளகாங்கிதம் அடைந்தேன் யான்!

அவர் கவிதை இதோ...

---------------------------------------------------------------------------------------
 தமிழுக்கு அணிசேர்க்கும் தரமான கவிஞனிவன் கலைமகனே!
_________________________________________________________________

கண்டான் மதுராபுர கலை மகனை
கதை கொண்டான் புது(மை) மைந்தன்
கவி நயம் சேர உள்ளத்தில்

கலை ரசம் ததும்பியது இல்லத்தி்ல்

உளம் மகிழ்ந்தது நெகிழ்ந்திடவே
கலை படைத்தவன் முகம் மலர்ந்து
கலையுலகக் கவிஞர்களை யளவளாவ
களிப்புடனே யுணர்ந்தவற்றை உரைத்தேன்...

தரமான கவியாரும் படைத்திடலாம்
தரணியிலே தனித்துவமா யிலங்கிடலாம்
பாரதியின் புகழையும் மிஞ்சிடலாம் - கலைப்
படைப் புலகி லுயர்ந்திட  லாமென்றான்!

உண்மை நிலை மானிடருக்கு உரைப்பவரே
உலகம் போற்றும் உத்தமக் கவிஞரெனலாம்
உரைத்தவற்றுள் கவிஞர் பாரதியும்
உயர் நிலையில் மதிக்கப் படுகின்றா னென்றேன்...

பொறுமையுடன் கேட்ட கலைமகனும்
புதுமையுடன் எ(ன்)ப் பார்த்து
புன்னகைகள் பலபுரிந்து - கவியால்
பு(த்)துலகைப் படைக்க முயல்வோ மென்றான்!

கவியுலகில் யானும் யாத்தவற்றைக்
கவனமாகக் கேட்டவனும் - சமூகம்
தடம் புரளும் சாதனங்கள் பற்றிய
தரமான கவியொன்றைக் கேட்டான்...

முறை தவறி  மக்கள்
முழு மூச்சாகக் கையாளும்
பொது சனத் தொடர்பு சாதனங்களால்
”புதை குழிக்கு என்ன பலன்?”

பொறித்தான் இணையத்தில்
பூலோக மாந்த றறிந்து
மாநபியினதும் மறை கூறும் விதிகளுக்கும்
மாற்ற மிலாது செயற்பட்டு (கையாண்டு)

பாவம் தவிர்ந்து முஸ்லிம் சமூகம்
பாருலகை விட்ட கன்றாலும்
மறு உலகில் உயர் பதவிகள்
மன்னவன் அல்லாஹ்விடம் பெற்றிடவே!

கலைமகனின் கவிதைகளைக் கொடுத்து - தங்கள்
கருத்துக்களை நற்றமிழில்
“பா” வடிவில் யாத் தெனக்குப்
புதுமெருகூட்டிக் கையளிக்க வேண்டுமென்றான்!

பொன்னியின் சொல்வனோடு கலைமகனின் கவிதைகளையும்
அள்ளி அணைத்தெடுக்க நெஞ்சு பூரிப்படைந்து
தெற்கிலும் தீந்தமிழிற்கு புகழ் சேர்க்கும்
கலைமகனை நீடூழி வாழ்கென வாழ்த்தியது எந்தன் மனம்!

தீந்தமிழில் இனிதாகப் பேசுகின்ற கலைமகனில்
தமிழ் கொஞ்சும் பாங்கென்ன பாங்கோ....
விந்தைதான் தெற்கில் இங்ஙனம் தமிழ் வளர்த்தல்
வியந்தே போனேன் நானுந்தான் அவன் தமிழில்!

ஒருசேரப் படமெடுத்தான்
ஒப்பவில்லை மனம் மறுக்க
தப்பாக நினைப்பாரோ வென்றெண்ணி
தான தற்குத் தயங்கி யிசைந்தேனே!

வடக்கினதும் தெற்கினதும்
வாழ்வியல் போராட்டங்களை
வளமான தமிழ் மொழியில் வழங்கிடவே
இரு மனமும் ஒருமனமாய் இணைந்திடுவோம்

கலைமகனும் புதுமை மைந்தனும்
கவியுலகில் தனித்துவமாய் மிளிர்ந்திடவே
கரம் நீட்டி வேண்டுகின்றேன்
கருணை யுள்ள ரஹ்மானே அருள்புரிவாய் நீ!

2014.05.05                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக