It கலைமகன் கவிதைகள்: அசின் விராது கொஞ்சம் பொறு!

ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

அசின் விராது கொஞ்சம் பொறு!

அசின் ஏய் நீவந்தாய்?
போதிமாதவன் வளர்த்த
போதி தர்மத்தை
தரைமட்டமாக்க
போதிமர நிழலில்நீ நின்று
கிளைகளை வெட்டிச் சாய்க்க
அகிம்சை வழியில்
அனைவரையும் அரவணைக்கும்
அனைவரினதும்
ஈரல்குலைகளை சுவைத்திட
கூட்டுச் சேர்ந்திட வந்தாயா அசின்?


உன்னாட்டில் நீயாடிய
ஆட்டங்கள் போதாக்குறைக்கு
ஈழத்தவரில்
இரத்தப் பசிகொண்டு
இரத்தக்கரைகண்டு
அதில் நீ உன்பாதங்களைக்கழுவ
இங்கு வந்தாயா?

நாதிகெட்ட நயவஞ்சகத்தனம்கொண்ட
உன்போன்றாரால்தான்
மீதமுள்ள ஒற்றுமையும் துவம்சம்
செய்யப்படுகின்றது அசின்?

அசிங்கமான செயல்களில்
ஆரநீயமர்ந்து மூவெழுத்து மடையர்களுடன்
மூத்திரம் நீகுடிக்க வந்தாயா?

அசின் உன்பசி இன்னும்
உன்னுடன் பிசினாய் உள்ளதா?
ஆம்… இஸ்லாமியர்களை
பூண்டோடு அழிக்க வேண்டுமென்று
பன்றியிறைச்சி சாப்பிட்டுவிட்டு
வந்து ஒன்றுதெரியாதவன்போல்
நீ நாடகம் ஆடுகின்றாயே…!

சர்வதேசத்தின் பயங்கரவாதியே…
உன்னுடன் கூட்டுச் சேர்ந்தவன்
இன்று….
முஸ்லிம் கவுன்சில் என்றால் என்னவென
கேள்வி வேறு கேட்கிறான் அழிந்துபோக….!

போதிமரத்து நின்றுகொண்டு
போதனை செய்கின்றவனையே
வெட்டிச் சாய்க்கும் உன்போன்றவர்கள்…
மாற்றானின் அமைப்புபற்றிக் கேட்க
வேட்கம்தான் இல்லையா?

நன்கு சால்வை போர்த்தி
உன்னுடலை நீமறைத்து
நீ நின்றாலும்…
உன்னாற்றம் உலகமே அறியும் தெரி…!

நீ இலங்கை மண்ணில் கால்பதிக்க
நாங்கள் உரத்துக் குரல்கொடுத்தபோதும்
எங்கள் குரல்கள் நொறுக்கப்பட்டன…
உன்னோடு இருப்பவர்கள் உன்போன்றவர்கள்
என்று எங்களுக்கு நன்கு தெரிந்ததால்…!

ஏ அசின்… நீபிசினாய் ஒட்டினாய்
கையாலாகாதவர்களின் பேச்சினால்…
உங்கள் ஊளைகள்.. உங்கள் ஓலங்கள்
தஹஜ்ஜத் கோழிகளின் கூவல்களுக்கு
ஒருநாளும் இடைஞ்சல் ஆகாது அசின்!

நாங்கள் ஒருக்காலும்
மஞ்சள் காவிகளைக் கண்டு
கபிலக் காவிகளைக் கண்டு
இறையை மறந்து
உமக்கு ஒருக்காலும் அடிபணியோம்!

கொஞ்சம் பொறு
பேரிடி பெருமின்னல்
பேரிரைச்சல் கட்டாறு
உனைக் கவ்வ..உனைச்சார்ந்தோரை
கவ்வ வந்திடும்…
உன்பேர் வையமெங்ஙனும் நிலைக்கும்!
இப்போதும் அப்போதும் நாங்கள்
சுஜுதில் இருப்போம் இறைமறுப்பாளர்க்கு
எதிராக அசின் விராது!

-கலைமகன் பைரூஸ் (Kalaimahan Fairooz)
28.09.2014 10.42




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக