சீன சென்றேனும் கற்றிடுக என்றநபி
சொல் வார்த்தை அமுதென்றே குமுரி
போனா ரெங்கள் பெரிய மனுஷன்தான்
பேனா வின்றி வாடிய குழந்தைபாவம்!
மின்சாரம் பேசிய பெருச்சாளி இல்லை
மின்சாரத்தில் சம்சாரம் மாற்றுவ ருண்டு
துன்பியலே வாழ்வியல் எனக் கண்டார்
துயரொடு விளக்கொளியில் கற்றிடக் காணார்!
மாற்றிட ஆடை யேதுமிலா துயர்ப்படுவார்
மனமகிழ்ந்திட ஈவார் எவருமிலை – இடி
ஏற்றிடு மிசையென முழங்குவ ருண்டிங்கு
மண்ணி லுயர்ந்திட வேழை உதவிடாரே!
சென்றிட பள்ளியிலை எழுதிட நூல்களிலை
சேர்ந்திருக்க சகபாடியிலை எம்மண் ணிதுவென
செந்நீரே வடிக்கும் ஏழைச் சிறார்க்கு
சாதியேதுமிலா நல்லவர் சகமீது தோன்றுவரோ?
-கலைமகன் பைருஸ்
19.10.2014 12.16
(கவிதை வயல் - 182 இற்காக எழுதியது)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக