பெற்றவர் தன்னைப் போற்றிடுவோம்
பேணும் தந்தையைப் போற்றிடுவோம்
கல்வியை நாளும் கற்றிடவே கனியவர்
குருவினைப் போற்றிடுவோம்!
உற்றவர் தன்னைப் போற்றிடுவோம்
உலகினில் பெரியோரைப் போற்றிடுவோம்
மற்றவர் நலமும் பேணிடுவோம்
மங்காப் புகழோடு வாழ்ந்திடுவோம்!
பெரியோர் சொற்படி நடந்திடுவோம்
பண்புடன் நாளும் வாழ்ந்திடுவோம்
சிறியோர் நாமும் உயர்ந்திடவே
சிந்தனை நல்லது கொண்டிடுவோம்!
உறவினர் சிறப்பினை அறிந்திடுவோம்
உவகை சேர்ந்திட எனச்சொல்வோம்
மறந்தும் மூத்தோர் மனம்நோக
வாழவே மாட்டோம் சிறியோர்நாம்!
-கலைமகன் பைரூஸ்
(வெற்றிக் கவிதை)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக