சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா
***********************************
கடல்கடந்து இலங்கைவந்து
கடுமுழைப்பைக் கொடுத்தன்று
அடவிபல அழித்தொதுக்கி
இடருடனே நாட்டிவிட்டு
இருப்பிடமாய் லயமென்னும்
மடந்தன்னில் வசித்தந்த
மலையகத்தை உருவாக்கி
உடல்மெலிந்து உருக்குலைந்து
உழைத்திட்டத் தொழிலாளர்
கடந்துவந்த பாதையெலாம்
கல்லுமுள்ளு நிறைந்ததுவே
வரலாற்றில்
இவரேட்டில்
எழுதாத துன்பத்தை
எவர்வந்தும் மாற்றாமல்
பழுதான இயந்திரமாய்
பரம்பரையாய்ச் சிதைந்தனரே
இதைமாற்றப்
புதுவரசு முடிவெடுத்துப்
புதியவழிக் காண்பித்தால்
மதுவுண்ட வண்டெனவே
மலைமக்கள் மகிழுவரே
எனவே
கண்ணீர்த் துடைத்திடும் கைக்குட்டை யாய்மலை
மண்வாழ் மக்கள் மனகளிலே - விண்மீன்
ஒளியூட்டி வேதனை ஓட்டிவிட வென்றோர்
தெளிவாய் முடிவெடுத்தல் தேன்.
- மெய்யன் நடராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக