🌿 பசுமை பேசட்டும்… நம் பூமி பேசட்டும்!
மரங்கள் பூத்திட, உயிர்கள் வாழட்டும்!
காற்றுகள் வீசியே, பனித்துளி வந்திடும் –
பசுமை பேசட்டும்… நம் பூமி பேசட்டும்!
பச்சை பசுமை பூமி தான் – பாசமிக்க தாயே!
மழை தரும் மரம்தான் – வாழவைக்கும் உயிரே!
மரம் நடுவோம் தோழா – உயிரின் ஓர் அங்கமே,
நாளைய குழந்தைக்காக – ஒரு நிழல் தருமே!
பசுமை பேசட்டும்... நம் பூமி பேசட்டும்!
மரங்கள் பூத்திட, உயிர்கள் வாழட்டும்!
காற்றுகள் வீசியே, பனித்துளி வந்திடும் –
பசுமை பேசட்டும்… நம் பூமி பேசட்டும்!
வானத்தில் வண்ணமே – பூமியில் பசுமையே!
மழையில் நனைந்திட, மரங்கள் தேவையே!
வேர்கள் பதிந்தால் – நம் வேரும் வலிமை!
நாளொரு மரமென – நம்மிடம் நம்பிக்கை!
பசுமை பேசட்டும்... நம் பூமி பேசட்டும்!
மரங்கள் பூத்திட, உயிர்கள் வாழட்டும்!
காற்றுகள் வீசியே, பனித்துளி வந்திடும் –
பசுமை பேசட்டும்… நம் பூமி பேசட்டும்!
மழைவர ஆசையா? மரம் வளர ஆசைதான்!
பள்ளியில் நடுவோம், பசுமைதான் ஆசைதான்!
ஒரு சிறு செயலில் – ஒரு பெரும் மாற்றம்!
பசுமைப் பாடமிது – தொடரட்டும் பாட்டாக!
பசுமை பேசட்டும்... நம் பூமி பேசட்டும்!
மரங்கள் பூத்திட, உயிர்கள் வாழட்டும்!
காற்றுகள் வீசியே, பனித்துளி வந்திடும் –
பசுமை பேசட்டும்… நம் பூமி பேசட்டும்!
@கலைமகன் பைரூஸ்
தமிழ்ச்சுடர்
📌 எனது 'கலைமகன் கவிதைகள்' பற்றிய உங்கள் மதிப்புமிக்க கண்ணோட்டத்தை கீழே கருத்துப்பாகத்தில் பகிருங்கள்.
உங்கள் வாசிப்பும், உங்கள் ஓர் வார்த்தையும் – என் எழுத்திற்கே ஓர் பெரும் ஊக்கமாம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக