அவர்களின் சிகை அலங்காரம்
காதுகளின் தோடுகள்
உதடுகளின்
கறுபுப்ச்சாயல்
பிற கோள்களிலிருந்து வந்த
எம்மை அழிக்க வந்த
அசுரர்களோ என்ன
எண்ணத் தோன்றுகின்றது...
அழகான பள்ளிவாயல்
அழகான ஐவேளை பாங்கு
உண்மையை உரத்துச் சொல்லும்
உன்னத உலமாக்கள்....
ஆயினும்...
ஜும்ஆ முஸ்லிம்களுக்கும்
ஸதாவிற்காக முன்னங்கால்களால்
ஓடிவருபவர்களுக்கும்
நல்லவை நாளும் கேட்பதில்லை...
தங்களைத் தாங்களே தரமானவர்கள்
என்று கங்கனம் கட்டிப் பேசுபவர்கள்
தங்கள் ஸதகாக்களை
அடுத்தவர்களுக்கு
வானுயர்த்திச் சொல்பவர்கள்
பள்ளிவாசல்களை
அழகாக்கின்றார்கள்
வெற்றிடமாய் வைத்து....
உண்மையை உரத்துச் சொன்னாலும்
ஊரின் அழுக்குகள்
உலக அதிசயமாய்
நிமிர்ந்தே நின்கின்றன..
கைகளில் நிறைவதால்
தான் / தாம் என்ற
எண்ணக்கருக்களால்...
நல்லமல்களும்
துஆக்களும்
இயக்கங்களால்
மேடை கட்டிப் பேசப்படுகின்றன
தொழுகையின்றி....
விடிவின்றிப் போவதற்கு
எங்கள் தொழுகைகளடுடன்
சுத்தமும்
கைகளைப் பிணைக்கும் என்பதில்
ஒரு தலைப்பட்சம்
அரசோச்சுகின்றது...
தான் என்பதைவிட்டு
தாமென்பதின் குறியீடுகள்
எத்தனை எத்தனையில்....
நாளும் நாடேறும்
உலக நாடுகளின்
ஆக்கினைகளில்
வான்தொடும் உயிர்கள் பற்றி
எண்ணாமலே
அராஜகத்தின் உச்சாணியில்....
கந்தூரிகளுக்கு மட்டுமாய்
ஸஹன் பிடிப்பதற்கு வரும்
முஸ்லிம் பெயர் தாங்கிகள்
வந்து சேரட்டும்
மஸ்ஜித்களில்....
ஒவ்வொருவராய்ச் சொல்வோம்
பாடசாலைகளிலும் முழங்குவோம்
பெற்ற பிள்ளையிடம்
பாய்ந்தேனும் செல்வோம்
இறைவழிபாடும்
இங்கிதமான சுத்தமுமே
கொஞ்ச காலமேனும்
பூமியில் நிறுத்துமென்று....
உங்களுக்கான இயக்கங்கள்
உங்களோடு போகட்டும்
பேசிப்பேசியே
உற்றாரை உறவினர்களை
அழித்தொழிக்காதீர்கள்...
மௌத்தின் பின்னரும்
கைகலக்காதீர்கள்...
அன்புறவுகளே....
காய்ச்சத்தின் துன்பத்தால்
நானும் பட்டேன் பாடு...
படுகிறேன் பாடு....
உறவுகளோடு பின்னியிருப்போம்
உளங்கள் குளிர்ந்திட
நல்ல ஐஸ்வோட்டர்
உங்கள் அழகிய பேச்சுக்கள்தான்...
இயக்கப் பேச்சுக்கள் அல்லவே அல்ல...
இருப்பவை எமக்கானவை அல்ல
இருப்போருக்கக் கொடுப்பதற்காக
இறைவன் எமக்குத் தந்தவை
சூழலை சுத்தமாய் வைப்போம்...
சூனியங்களை அழித்தொழிப்போம்...
உளத்திற்கு ஆறுதல் தந்திட
மஸ்ஜித்களை அண்டுவோம்...
நல்லவற்றை மட்டுமே
ஆழ்மனதில் கொள்வோம்...
நாளை அல்ல ... அடுத்த கணம்
எனக்கு என்ன நடக்கவியலும்
என்பதில்
சந்தேகம்தானே....
ஒவ்வொரு ஆத்மாவும்
மரணத்தை சுவைத்தே
தீர வேண்டுமல்லவா?
இறையின் அழைப்புக்கு
ஆயிரம் காரணங்கள் இருக்கலாம்.
இருக்கும் காலத்தில்
இறைவனுக்கு
ஆகுமாவறை செய்து
ஆணவமின்றிச் செல்வோம்....
உங்கள் கரங்கள்
எனது கரமும்
ஒன்றாக இறையிடம் துஆ இரப்போம்...
பள்ளிகளோடு
பிணைப்பினை
ஒன்றாக்குவோம்...
இக்கணம் மட்டுமல்ல
எக்கணமுந்தான்....
- கவலை தோய்ந்த உள்ளத்துடன்
(கால்களின் வலிகளைத் தாங்கி)
-மதுராப்புர கலைமகன் பைரூஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக