காதல் வலை
காதல் என்று பெயரிட்ட
கனவுக் கயிற்றில் சிக்காதே மாணவனே,
கண நேர இனிமை காட்டி
காலமெங்கும் கட்டிப் போடும் வலை அது.
புத்தகத்தை விடுத்து
பார்வையில் மூழ்கினால்,
எதிர்காலம் உன்னை விட்டு
மௌனமாக விலகிச் செல்லும்.
காதல் குற்றமல்ல,
ஆனால் காலம் தவறினால்
அது கல்விக்குத் தடையாகி
கனவுகளைக் கரைத்திடும்.
இன்று கல்வி –
நாளை காதல்.
முன்னேற்றம் பெற்ற மனம் தான்
நிலையான உறவுக்கான அடித்தளம்.
அறிவைத் தேர்ந்தெடு,
அதுவே உண்மைக் காதல்.
உன்னை உயர்த்தாத காதல்
உன் வாழ்க்கைக்குத் தேவையில்லை.
- கலைமகன் பைரூஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக