It It கலைமகன் ஆக்கங்கள்: விடியல் தேடும் கண்கள் | கலைமகன் பைரூஸ் Meta Tag Generator Tool By digitalyworld.in Instructions: Simply copy the following lines of code and insert them Between the and tags in your HTML Document. Enjoy from digitalyworld.in
📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

திங்கள், 23 பிப்ரவரி, 2026

விடியல் தேடும் கண்கள் | கலைமகன் பைரூஸ்

இமயத்து பனிக்குள் இமைக்காது நின்றான்;
இருளின் உள்ளே ஒளியொன்றைத் தேடினான்;
இன்று —
கையில் குர்ஆன்!
காலத்தின் கதவு திறப்பதா?
புகழ் ஒரு புயல்;
பேரரங்கு ஒரு அலை;
ஆனால் மெய்யுணர்வு —
அமைதியின் இடியாய்
அகமெங்கும் உடையும்.
கரத்தில் ஏந்திய கருணை வசனம்
கண்களில் இறங்கின் கண்ணீர் மாறும்;
அர்த்தம் நெஞ்சில் அரணாய் நின்றால்
அகந்தை சாம்பலாய் சிதறும்.
ஏ.ஆர். ரஹ்மான் இசை போல
இறை ஓசை உள்ளம் நனைத்தால்,
பாவம் கரையும்;
புதிய மனிதன்
புனலிலிருந்து எழும்.
யுவன் சங்கரின் யாழ் நரம்பில்
உருகும் தாளம் உண்டேல் போதும்;
வசனம் உயிரோடு கலந்து விட்டால்
வானம் கூட உள்நோக்கி வரும்.
குறளரசன் சொல் குறளில் சொன்ன
குறுகிய தீயே உலகம் எரித்தது;
ஒரு வசனம்
உள்ளம் புகுந்தால்
ஒரு வாழ்க்கை முழுதும் மாறும்.
பெரியார்தாசன் பேசிய பகுத்தறிவு
பயம் கிழித்துப் பாய்ந்ததுண்டு;
அருள் இணைந்த அறிவு வந்தால்
அடிமைச் சங்கிலி தானே முறியும்.
இது புகழின் பயணம் அன்று;
இது உள்ளத்தின் புரட்சி
குர்ஆன் கையில் —
விடியல் கண்களில் —
மனிதன் மறுபிறவி எடுக்கும் தருணம்.
நாம் பிரார்த்திப்போம் —
புகழுக்கு அல்ல;
உயர்வுக்கு அல்ல;
உண்மை விழிக்க;
அருள் நெஞ்சில் நிரம்ப.
அடுத்த ஆண்டு
ரமழானைச் சுவாசிக்க
திருக்குர்ஆன்
உள்ளத்தில் ஒளியூட்ட
கரங்கள் ஏந்துவோம்...
இறைவன் நாடினால்
ஹிதாயத் கிடைத்திட....
- கலைமகன் பைரூஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக