It It கலைமகன் ஆக்கங்கள்: Fairooz Tamil Font | Diaspora Tamil and all Meta Tag Generator Tool By digitalyworld.in Instructions: Simply copy the following lines of code and insert them Between the and tags in your HTML Document. Enjoy from digitalyworld.in
📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

வியாழன், 29 ஜனவரி, 2026

Fairooz Tamil Font | Diaspora Tamil and all

Fairooz Tamil Font – இலவச பதிவிறக்கம் | கலைமகன் பைரூஸ்

தமிழ் மொழியின் எண்ம (டிஜிட்டல்) வளர்ச்சியில் எழுத்துருக்கள் (Fonts) மிக முக்கியமான பங்காற்றுகின்றன. அந்த வகையில், 1996 களில் கலைமகன் பைரூஸ் என்னால் உருவாக்கப்பட்ட “Fairooz” என்ற தமிழ் எழுத்துரு, நவீன

தோற்றத்தையும் வாசிப்பு எளிமையையும் ஒருங்கே கொண்டதாகும்.

இந்த எழுத்துரு கல்வி, இலக்கியம், வலைப்பதிவுகள், சமூக ஊடக வடிவமைப்புகள், YouTube Thumbnail, PDF, புத்தக வடிவமைப்பு போன்ற பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தக் கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.


⬇️ Fairooz தமிழ் எழுத்துரு – இலவச பதிவிறக்கம்

TrueType Font (.ttf) | Unicode ஆதரவு | Windows / Android / Linux ஆதரவு


🔤 எழுத்துரு முன்னோட்டம் (Font Preview)

வெல்லத் தமிழினி வெல்லும் - கலைமகன் பைரூஸ்
தமிழ் தண்மொழி உலகெங்கும் ஒளிரட்டும்
1234567890

மேலுள்ள வரிகள் Fairooz Tamil Font மூலம் காட்சிப்படுத்தப்பட்டவை. எழுத்துகளின் வளைவுகள், இடைவெளிகள் மற்றும் ஓட்டம் வாசிப்பிற்கு எளிதாக வடிவமைக்கப்பட்டுள்ளன.


📜 பயன்பாட்டு அனுமதி (License)

இந்த Fairooz Tamil Font அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது.

  • ✅ தனிப்பட்ட பயன்பாடு
  • ✅ கல்வி மற்றும் இலக்கியப் பயன்பாடு
  • ✅ வணிகமற்ற (Non-commercial) வடிவமைப்பு

குறிப்பு: எழுத்துருவை மறுவிற்பனை செய்வது அல்லது தன் பெயரில் மறுவெளியீடு செய்வது அனுமதிக்கப்படவில்லை.


✍️ எழுத்துருக்களும் கலைமகன் பைரூஸின் எழுத்துருவும்

எழுத்துரு என்பது ஒரு மொழியின் காட்சி முகம். தமிழ் போன்ற தொன்மையான மொழி, காலத்திற்கேற்ப புதிய எழுத்துருக்களைப் பெறும் போது, அது டிஜிட்டல் உலகில் மேலும் வலுப்பெறுகிறது.

Fairooz என்ற இந்த தமிழ் எழுத்துரு, தமிழ் மொழியின் இயல்பை காக்கும் அதே நேரத்தில் நவீன வடிவமைப்புத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் ஒரு முயற்சியாக உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ் – தொழில்நுட்பம் – கலை என்ற மூன்றின் சந்திப்பாக உருவான இந்த, சொந்த கையெழுத்திலான எழுத்துரு, தமிழ் டிஜிட்டல் எதிர்காலத்திற்கான ஒரு சிறிய ஆனால் அர்த்தமுள்ள பங்களிப்பாகும் என நான் நினைக்கிறேன். 

இந்த எழுத்துரு பற்றிய உங்கள் கருத்துகளை, கருத்துப் பெட்டியில் உள்ளிடவும்.


– தமிழன்புடன்,
கலைமகன் பைரூஸ்

#diasporastudents

#diaspora
#tamilforall
#learningtamil
#learntamilonline
#onlinetamil
#kalaimahanfairooz

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக