It It கலைமகன் ஆக்கங்கள்: தினகரன் Meta Tag Generator Tool By digitalyworld.in Instructions: Simply copy the following lines of code and insert them Between the and tags in your HTML Document. Enjoy from digitalyworld.in
📰 புதிய பதிவுகள்
Loading recent posts...
தினகரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தினகரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 12 நவம்பர், 2012

அவள் வரவேண்டும்!



அவள் வர வேண்டும்
-------------
முன்றானை விளையாட
முகட்டுக் கனிகள் ஆட
முன்னே நடந்து வரவேண்டும்
முகம் நாணி என்முன்னே!
------
கொவ்வை இதழ் பதிக்க
குறுநகை இதமளிக்க
கொடியிடையாள் வரவேண்டும்
கொஞ்சிக் குலவி என்முன்னே!
------
நினைவுகள் நெஞ்சினிக்க
நித்திரையில் பூமணக்க
அன்னமென வரவேண்டும்
அடிபெயர்த்து என் முன்னே!
-------
- கலைமகன் பைரூஸ்
தினகரன் 1994/08/21


கருத்துரைகள்:
---------------------
Srikandarajah கங்கைமகன் வணக்கம் Kalaimahan Fairooz! கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்பதுபோலத் தங்கள் கவிதை நயம் கண்டு களித்தேன். முகட்டுக் கனிகள் என்பது புதிய கற்பனை. புரிந்து கொண்டேன். புரியாதவர்களுக்கு அது புதிராக இருக்கட்டும். மிகவும் நன்றி ஐயா. 2012/11/12

ஞாயிறு, 11 டிசம்பர், 2011

ஈழத் திசை பரப்பு

ஈழத் திசை பரப்பு
- கலைமகன் பைரூஸ் -


ஈழவளநாடு இனிமைசேர்நாடு
இங்கெங்கும் அழகென்று பண்பாடு!
நீள்நதிகள் பாய்வன இங்குபாரு
நெஞ்சமதை பாசத்தால் நீநீட்டு!


வடக்கினை தெற்கினை ஒன்றாய்ப்பாரு
வடுக்களை மறந்து நீமாறு!
இடுக்கண் மறந்திட இங்குண்டு பூங்காடு
இதமெனவே நீஅதனைப் போய்ச்சேரு!


நீள்தெங்குகளும் பனைகளு முண்டிங்குபாரு!
நலமுண்டு அதிலெல்லாம் உனையும்நீ மாற்று!
புள்ளெனவே நீபறந் தெங்கும் செல்லு
புசிப்பதொடு இலங்கையென் நாடென் றோது!


மிக்குயர் மலைகளும் தேயிலையு முண்டு
மிதமான கல்விச் சாலைகளு முண்டு!
திக்கெல்லாம் உனைப்பாட கல்விப் பாலுண்டு
திசைபரப்பு ஈழமென் நாடென்று!


தமிழ் முஸ்லிம் சிங்களவர் நாமொன்றென்று
தரணியிலே நீ உரத்துப் பாடு!
தேமாங்கனியன்ன ஒற்றுமை ஒன்றேயேநீ
தெவிட்டாத சுவையென இங்கு பேணு!


செம்புலமெங்கும் செம்மையையே நீகாணு
சரித்திரம் புதுபடை நீஉயரு!
நம்மவர் புகழெங்கும் களிபேசு
நமதான நாட்டினையே உயர்த்திப்பேசு!


கோயில்பள்ளி தாகபைகள் நிறைநாடு
குனிந்து நிமிரச்செயும் விவசாயநாடு!
நோயில்லை எங்களுக்குள் ஒன்றாயின்பாரு
நீட்டிடலாம் சிந்தித்திட நிமிர்ந்துநீபாரு!


நன்றி: தினகரன் வாரமஞ்சரி
http://www.thinakaran.lk/Vaaramanjari/2011/12/11/?fn=d1112111
நன்றி சைபா பேகம் - இலண்டன் வானொலி (கவிதை நேரம்)

https://soundcloud.com/kalaimahan/aud-20180214-eelath-thishai-parappu-poet-kalaimahan-fairooz