அவள் வர வேண்டும்
-------------
முன்றானை விளையாட
முகட்டுக் கனிகள் ஆட
முன்னே நடந்து வரவேண்டும்
முகம் நாணி என்முன்னே!
------
கொவ்வை இதழ் பதிக்க
குறுநகை இதமளிக்க
கொடியிடையாள் வரவேண்டும்
கொஞ்சிக் குலவி என்முன்னே!
------
நினைவுகள் நெஞ்சினிக்க
நித்திரையில் பூமணக்க
அன்னமென வரவேண்டும்
அடிபெயர்த்து என் முன்னே!
-------
- கலைமகன் பைரூஸ்
தினகரன் 1994/08/21
கருத்துரைகள்:
---------------------
Srikandarajah கங்கைமகன் வணக்கம்
Kalaimahan Fairooz! கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்பதுபோலத் தங்கள்
கவிதை நயம் கண்டு களித்தேன். முகட்டுக் கனிகள் என்பது புதிய கற்பனை.
புரிந்து கொண்டேன். புரியாதவர்களுக்கு அது புதிராக இருக்கட்டும். மிகவும்
நன்றி ஐயா. 2012/11/12
காதலாள் வரவேற்பு கருத்துடைத்து
பதிலளிநீக்குஆதலால் உமக்கு வாழ்த்துடைத்து.
பணி தொடரவும் இனிய நல்வாழ்த்து!
வேதா. இலங்காதிலகம்.