கைகள் கரகட்ட வர
உடுப்பெல்லாம் ஊத்தபட
ஸுப்ஹிலேயே
யாவரத்துக்கு போரமச்சான்....
நான் சொல்றதக் கொஞ்சம்
கேளுமச்சான்....
அல்லா ரஸுல மறந்து
நாடுகாட்டுக்கு நீங்க போயி
ஆயிரங்கள் பல தேடியுந்தான்
என்னதான் கிழிக்கப்போற...
கோவம் புடிக்கவாணம் மச்சான்
நான் சொல்றதக் கொஞ்சம்
நிண்ணு நீ கேளுமச்சான்...