செவ்வாய், 19 அக்டோபர், 2010
குர்ஆன் எரிப்பவனே!
தாய்மொழி செந்தமிழி லெழுதும் கவியிது
தரங்கெட்ட உனைச் சேராதோ – சேரும்
மெய்யெரி வதினால் மனம்வாடுதலால்
மொழிந்தே னுனை இழித்து!
காசினிலே மூழ்கி கயமைக்கு வழிகோலி
காசினியி லுயர்ந்து தானிற்க ,வெங்கொடுமை
கண்டுவிட்டான் வஞ்சக நெஞ்சத்தான் , நரகம்
கெட்டவன் போகு மிடம்
திருக்குர்ஆன் திருநபிக்கு வல்லா னவன்
நறுமணமாய் ஈந்த தன்றோ – வேங்கண்ணர்
சிறுமையினால் அழித்திட வந்தாரெனின் நரகு
சீறியெடுக்கு மவனை நன்கு
வாழ்வாங்கு வாழுதற்கு வல்லான் மறை
வல்லவராய் மிக நல்லவராய் வாழ்வதற்கும்
காழ்ப்பின்றி கரமிணைத்து நிற்பதற்கும் மறை
காசினியி லொளிவடிவே தெளி!
சிறியோர் பெரியோர் ஆடவர் பெண்டு
சிறந்திட வந்தது திருமறை நீகாண்!
மறுமை மேலெழும் செந்நா வுன்னை
மூடித் தீண்டிடும் தெளி!
எழுத்தேனும் இயற்றிட முடியலை யுன்னால்
எரித்திட குர்ஆன் எரிந்தன உளங்கள்
கொழுத்த பணம் காத்திடுமா உனை
மாகெட்டவனே எண்ணிப் பாரு!
பாதணி கொண்டு மிதிக்கின்றாய் நீ
பாந்தள் உனைச் சூழும் நீ அறியாய்
மூதேவியே முனிந்தோ முனை நாமெலாம்
முடிவுன் மாமோசமே தெளி!
வெறியன் டெர்ரி ஜோன்ஸ் கால்கோலிட
வெறியோநாய்கள் நாவினைத் தூக்கி
வேண்டாத கருமமது செய்தனரே –உம்
வஞ்ச மழிவ தென்று?
அபாபீல்கள் சிறுகல் அழித்தன பெரும்படை
அறியாது ஆடுகின்றாய் ஆட்டம் நீமிக
கனவுமிக்க் காண்கிறாய்நீ கானல் - அறி
கண்ட நடுக்கம்நீ தெரி!
துப்பாக்கி யினால் எரிக்கின்றாய் வேதம்
துர்நடத்தை யுடையான்நீ பெறுவாய் துன்பம்
இப்பாரி னிறுதிவேதம் திருக்குர்ஆன் என்பதுநீ
அறியாயோ குருடா நீ!
உடைத்திட வேலி ஒருமா டுந்தன்
குட்டிக் கன்று மழியுது உன்னால்
படைகூட்டி பார்வைக்கு ஆளும் கூட்டி
அருள்மறை அழிக்கிறாய் நீ!
பாரி லெத்துணை ஒளிக ளேற்றினும்
மலிபெரும் திருமறைக் கீடாமோ காண்!
பெருவலியுடனே தீயா யெரியுது உள்ளம்
பார்த்திடு அழிவினை யுன்!
பொல்லாரைச் சேர்ந்தொழுகும் கயவன்நீ
சொல்வழியில் செல்வதுதான் வழியோ –அட
நில்லாத நிலமீதி லுன்னாட்டம் நீடுழி
நின்று நிலைக்காது காண்!
திருமறை யழித்திட திறந்தா யோர்தினம்
திருநபி வழிமுறை அழித்திட நினைத்தனை
ஒப்பிலா குர்ஆன் எரித்தனை –நின்கரம்
ஒழிந்திட வேண்டுவதென் கரம்!
உனை யெரிக்கும் மாநரகு அறியாய்நீ
உயிர்த்தெழுவாய் கொடுந்தீயில் மேலெழுவாய்
துணையின்றி தவிப்பாய்நீ அல்லலுறுவாய்
திண்மைநிலை புல்லினும் போம்!
சாதியிலை நிறமிலை பால்பேதமிலை
சமுதாய மெதற்கும் நல்லறமே கூறும்
குர்ஆனழித்திட விதிகள்பல வியற்றுகிறாய்
குஷ்டம் போட்டிறப்பாய் நீ!
புர்க்கா னெரித்திட எழுந்தனைநீ சண்டாளா!
புனித நன்னூல் சிறப்பினைக் காணான்நீ
மார்க்க மேதுமறியா மாமடையான்நீ –வைல்
மாநரகிற் கிரையாவ தறி!
வான்மறை யழித்திட வைத்தாய் நீகை
மறையிறையொடு போரிட்டாய் நீமிக
வான்குமுறிடி லண்டமுகடு முனைச்சூழும்
வல்லான் பெருமை யறி!
-கலைமகன் பைரூஸ்
இலங்கை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக