It கலைமகன் கவிதைகள்: வானொலிக்குயில் இராஜேஸ்வரி சண்முகத்தின் ஞாபக விழா

வியாழன், 10 மே, 2012

வானொலிக்குயில் இராஜேஸ்வரி சண்முகத்தின் ஞாபக விழா

இலங்கை வானொலியின் புகழ்பெற்ற அறிவிப்பாளர் காலஞ்சென்ற இராஜேஸ்வரி சண்முகத்தின் ஞாபக விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (13..05.12) கொழும்பு வெள்ளவத்தை தமிழ் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு இடம்பெறவுள்ளது . விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் பிரதம நிறைவேற்று அலுவலர் சாந்தி சச்சிதானந்த்ததின் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன் கலந்து சிறப்பிக்கவுள்ளார். அத்துடன் கல்முனை மானநர சபை முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப், மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவகீர்த்தா பிரபாகரன், இலங்கையின் முதலாவது பெண் நீதிபதி ஏ.எல்.நூறுஸ் மைமுனா, முன்னாள் பிரதி அமைச்சா ;சட்டத்தரணி எஸ்.நிஜாமுதீன், புரவலர் ஹாசிம் உமர் , அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எஸ்.எம்.ஹமீட், கவிஞர் ஜின்னாஹ் சரிபுதீன், முஹமட் மர்ஸூக், பிரபல அறிவிப்பாளர் அஷ்ரப் சிஹாப்தீன் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பதிதிகளாக கலந்து கொள்ளவுள்ளனர். தடாகம் கலை இலக்கிய வட்டத்தின்ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில்கவியரங்கம் மற்றும் கௌரவிப்பு நிகழ்வு என்பனவும் இடம்பெறவுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக