It கலைமகன் கவிதைகள்: அவள்!

செவ்வாய், 29 மே, 2012

அவள்!

ஐனுல் ரிஸ்னா ரழீன் என்ற சகோதரி எழுதியிருந்த ஆங்கிலக் கவிதையொன்றைக் கண்டு, என்மனம் துள்ளியது. அக்கவிதை போலும் தமிழில் எழுதினேன் கவிதை.
தினமும் நான்
கல்லூரியிலிருந்து
பாதையைக் கடக்கும்போது
காண்கிறேன் அவளை!
கருணை ஒளிவீசுகிறது
அவளது
சிறிய கண்கள்!
ஏதோ சொல்ல நினைக்கின்றன
அவை!

அவளோ
என்னைப் போன்ற
சிறுமி!
ஆனால்
என்னிலிருந்து வேறுபடுகிறாள்
அவளோ
எப்போதும் இருப்பது
சாலை ஓரத்தில்...!

அவள்
தெருவீதியில் இருக்க
கடந்து செல்கின்றன
ஆயிரமாயிரம்
கண்கள்!
ஆனால்
ஒரு “செக்க“னாவது
தரித்துச் செல்வாரில்லை!
அவள்
ஏதோ பேச நினைக்கிறாள்!!

அவளுக்கு
உற்ற துணை யாருமில்லை
நண்பர்களில்லை
ஆனால்
அவளைப் பற்றி
என் மனம்
ஏதோ பேசுகிறது!
அவளுக்காக
உதவ வேண்டுமென்று!

தினந்தோறும்
அவளையே நான் நினைக்கிறேன்
அவளது கருணைக் கண்கள்
நிழலாடுகின்றன!
அவளது சிந்தனையில்
மாற்றம் ஏற்படுத்த
என் மனம்
ஏங்குகிறது!
அவள் வாழ்வில்
புதியதொரு பக்கத்தை
புரட்ட மனம்
விரும்புகிறது!

நிச்சயமாக
நான் அவளுக்கு உதவினால்
அவள்
யாருடனும் இல்லாத
அன்பைச் சொரிவாள்!
அவளுக்காக
நான் பிரார்த்திக்கிறேன்!
அவளும்
நானாக இருக்க....!
-கலைமகன் பைரூஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக