It It கலைமகன் கவிதைகள்: விடை கொடு! Meta Tag Generator Tool By digitalyworld.in Instructions: Simply copy the following lines of code and insert them Between the and tags in your HTML Document. Enjoy from digitalyworld.in

ஞாயிறு, 20 மே, 2012

விடை கொடு!

- பாத்திமா லரீபா பொல்கொல்லை -

பேசுவதற்கு ஆயிரம் வார்த்தைகளுண்டு- என்னிடம்
கேட்பதற்கு ஓராயிரம் வினாக்களுண்டு- உன்னிடம்
கேவலமாய் என்னை எண்ணிவிட்டதால்- நீ
கோபம் கொள்கின்றேன் என்னிடமே - நான்

கண்களில் கனவுகளாய் சுமந்தேன் உன்னை- அன்று
கண்ணோரம் சுமக்கின்றேன் கண்ணீர் துளிகளாய்- இன்றும்
நேற்றும் மட்டுமே அறிந்த உன்னதமான உறவு- அன்று
காயங்களை மட்டுமே எனக்குப் பரிசளித்தது- என்றும்

எனக்காய் தந்த சந்தோசங்கள்- நீ
என்றும் என் நினைவில் மறவாதவை - அவை
எதிரியாய் பார்க்கவில்லை என்றும் உனை- நான்
ஏணிப்படியாய் வளர வாழ்த்துகின்றேன்- உன் வாழ்க்கை

விடைபெறுகின்றேன்- நான்
விடியலை நோக்கி - அல்ல
விதி எனக்களித்த - உன்
விரக்தியை நோக்கி....

இன்றைய தினகரன் வாரமஞ்சரியில் (20.05.2012) பிரசுரமாகியுள்ள கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக