வண்ணத் தமிழ்மொழி வெற்றி(க்) கலைப்புலி
நட்டும் ஜின்னாஹ்வே!
வாகைசூடி வென்று வளந்தரு
வண்டமி ழின்செல்வா!
மண்ணுத் திசையெலா(ம்) பாவி லடங்கிட
கவிதரு புலவீரே!
இன்பம் தந்திட நற்றமிழ் மலர்ந்திட
இயற்றமிழ் தந்திடு தலைவா!
எண்ணில் பல்கலை கற்றுப் புவியினின்
வாழ்ந்திடு பொன்னே!
எந்தைத் தமிழிது விந்தை செய்திடு
என்றிடு கவியரசே!
புண்ணில் நற்றமிழ் வளமாய் வாழ்ந்திட
புதியன படைப்போனே!
புவியில் நல்வினை செய்திடு புலவோய்
புகழொடு வாழ்கவே!
வாழ்த்து மடியேன்
கலைமகன் பைரூஸ்
2012 - 09 - 01
(அகவை அறுபத்தாறில்
அன்னைத் தமிழ்க்காவலன்
ஜின்னாஹ் சரிபுத்தீன்
(1943 செப்டெம்பர் 01 - 2012 செப்டெம்பர் 01)) அவருக்காய் இக்கவிதை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக