It It கலைமகன் கவிதைகள்: உலகம் அழியும் நிச்சயம்! Meta Tag Generator Tool By digitalyworld.in Instructions: Simply copy the following lines of code and insert them Between the and tags in your HTML Document. Enjoy from digitalyworld.in

திங்கள், 3 டிசம்பர், 2012

உலகம் அழியும் நிச்சயம்!


மாயன் நாட்காட்டிக்காக
கதைகள் பம்மாத்துக் காட்டுகின்றன!
ஆயிரம் ஆயிரம்
கனவுகளைச் சுமந்த
போலிமனிதர்களும்
கூடவே
ஓராயிரம் ஆத்திகர்களும்
எல்லையில்லா
நாத்திகர்களும்
எல்லையில்லா துன்பம்சுமந்து....

என்றாலும்
பயந்து சாகும்
எந்த ஆன்மாதான்
அந்த டிசம்பர் 21க்கு முன்னர்
தம்மில் பதுக்கிவைத்துள்ள
கறுப்புப் பொருட்களை
ஒட்டிய உடலோடுள்ள
பாவப்பட்டோருக்கு
கொடுக்க முன்வருகிறது?
கேட்டுத்தான் பார்ப்போமே!

ஒட்டிய உடலுடலுள்ள
ஒருவன் இப்படிச்சொன்னால்....

2012 டிசம்பர் 21
உலகம் முடியட்டும்
சந்தோசம்....
நீங்கள்
உங்களிடமுள்ளவற்றில்
ஒரு கவளத்தை
டிசம்பர் 20 ஆம் திகதி
எங்களுக்குத் தந்துவிட்டு
அழிந்துபோங்களேன் என்று....

யார்தான் முன்வருவார்...
எல்லாரும்
போலிவேசம் தரித்த
பச்சோந்திகள்தாம்...

உலகம் நிச்சயம் முடியும்
ஆனால்
எங்கோ ஒரு கல்லில்
யாரோ ஒருவன் எழுதிய
கபட வார்த்தைகளை
மாயன் நாட்காட்டியாய்க் கண்டு
ஆருட வார்த்தையாய்கொண்டு
பயந்து நடக்கக்கூடியதல்ல அது!

நிச்சயம்
உலகம் அந்தத்தை அடையும்
வானும் புவியும்
துகள் துகளாய் மாறும்
அதற்காக
மாயன் நாட்காட்டி
சொல்வது உண்மையாகாது!

அது
படைத்தவன் ஒருவன் மட்டுமறிந்த
பரமரகசியம்....
எந்த ஒரு வல்லவனுக்கும்
எந்த நவீன புத்தியாலும்
அந்த முடிவுநாளை
எந்த நவீனத்தினாலும்
கண்டுகொள்ளவியலாது!


ஏன் நபிமார்களோ
தூதர்களோ கூட அறியமுடியாதது
அந்த இறுதிநாள்
மாயன் நாட்காட்டி
எங்கே சொல்கிறது
எப்படிச் சொல்கிறது
இறைவனை விஞ்சி!

மாயன் நாட்காட்டியில்
டிசம்பர் 22 எழுத மறந்தது
எழுதியவனின் குற்றம்
அதற்கு
ஊனின்றி உறக்கமின்றி
எலும்புகள் கட்டிக்கொள்ள
அக்கினி மூச்செரிக்கிறது
உயிரினங்கள் எல்லாம்....!

மதங்கள்
மௌனிக்கின்றனதான்!
உண்மை இதுவாகவும்
இருக்கலாம் என்று....!

நிச்சயம்
யுகமுடிவுநாள் வரும்....
ஆனால்
மாயன் நாட்காட்டி சொன்ன
டிசம்பர் 22 இல் அல்ல....
அது நாட்களில் சனி....
வருவதாயின் வரும்
வெள்ளிக்கிழமை
இது இறை சொன்னது...!

யுகமுடிவிற்காய்
நடந்ததும்
நடப்பதும் தவிர
நடக்கவிருப்பதும்
நடந்தால்தான்
விண்ணும் மண்ணும்
ஒன்றாகும்
இறுதி விசாரணைநாள் தோன்றும்!

மகளிடம் தாய் கெஞசஞவாள்
ஏழை பணக்காரனாவான்
குடிசைகள் கோபுரங்களாகும்
விபச்சாரம் மது பெருகும்
தகுதியே இல்லாதார் தகுதிபெறுவர்
பாலைவனம் சோலைவனமாதல்
காலம் குறுகிச் செல்லுதல்
கொலைகள் சர்வ சாதாரணமாதல்
நிலநடுக்கம்
பூகம்பம் மேலெழுதல்
பள்ளிவாசல்கள் சோடணைகளால்
உச்சாணியில் நிற்றல்
பாதையெங்கனும் கடைகள்
எண்ணிக்கையிலாப் பெண்கள்
நிர்வாண ஆடையில் மக்கள்
உயிரிலாத பொருட்கள் பேசுதல்
வாய்நிறையக் கத்தி பொருள்தேடல்
முகமன் கூறுவதை முகத்துதிக்காக்கல்

அவைமட்டுமா
இல்லவே இல்லை
யுகமுடிவின் சிறு அடையாளங்களாய்
இன்னுமுள...
பள்ளிவாசல்கள் பாதைகளாதல்
தற்கொலையில் ஆனந்தம் காணல்
இறைத்தூதரென பொய்யன் தோன்றல்
பழையவர்களை காப்பியடித்தல்
நடக்கிறது... சிறு அடையாளங்களாய்
நிச்சயம்
யுக முடிவுநாள் வரும்
ஆனால் மாயன் நாட்காட்டி நாளுக்கல்ல...

யூதர்களுடன் மாபெரும் யுத்தம் நடக்கும்
புனித ஆலயம் சேதப்படுத்தப்படும்
யூப்ரடீஸ் நதியில் தங்கப் புதையல் காண்பர்
கஹ்தான் இன மன்னரின் ஆட்சி வரும்
அல்ஜஹ்ஜாஹ் மன்னர்
எண்ணிப் பார்க்காது வாரி
வழங்க மன்னர் வருவார்

செல்வம் பெருகும்
மாபெரும் யுத்தம் மூளும்
பைத்துல் முகத்தஸ் மீளும்
மதீனா தூய்மையடைதல்

அன்றும் இன்றும் என்றும்
இவை....
நிச்சயம் யுகமுடிவு நாள்வரும்
ஆனால்
மாயன் நாட்காட்டியின்
டிசம்பர் 22 இல் இல்லவே இல்லை...

நிச்சயம்
யுக முடிவுநாள்வரும்
இவை நிகழ்ந்து முடிய
சந்தேகம் எனக்கில்லை
நான்
மாயன் நாட்காட்டிக்கு
தலைவணங்காததால்
எனது
தலைசாய்த்தல்
தலைவர் முஹம்மதைத் தந்த
தயாளன்
அல்லாஹ்வுக்கு மட்டுமே என்பதால்!

புகை மூட்டம் 
ஒற்றைக் கண்ணன் தஜ்ஜால்
ஈஸா நபியின் மீள்வருகை
யஃஜுஜ் மஃஜுஜ் கூட்டத்தினரின் வருகை
தாப்பத்துல் அர்ழ்
மேற்கில் சூரியோதயம்
மூன்று பூகம்பங்கள்
பெரு நெருப்பு

இவை நடக்க
நிச்சயம் யுகமுடிவுநாள்
வந்தே ஆகும்...
ஆனால்...
மாயன் நாட்காட்டிக்காக அல்ல!
அல்லாஹ்வின் வாக்கிற்கொப்ப..!


நாம் வீணில் கழிக்கும்
இந்த மண்
நிச்சயம் ஒருநாள் அடியோடு அழிக்கப்படும்!
அவ்வாறு அழிக்கப்பட்ட
மீண்டும்
அவன் ஆன்மாவான்.
இறை தீர்ப்புக்காய்
ஆன்மாக்கள்
அல்லற்படும்...
அப்போது
மாயன் நாட்காட்டி
எந்த உதவியும் செய்திடாது...
மாயனை நம்பும் ஆன்மாக்கள்
ஏன்
யுகமுடிவின் பின்னரான
பயங்கர நாள்பற்றி
நினைக்க மறுக்கிறது....

தன் பிறப்புப்பற்றி
வந்ததன் காரணம் பற்றி
வாழ்வதன் காரணம் பற்றி
வாழ்வின் பின்னரான நிலைபற்றி
நிம்மதி பெருமூச்சு
விடுவது எவ்வாறோ என்பதுபற்றி
ஏன் ஆன்மாக்கள்
எண்ண மறுக்கின்றனவோ?

மாயன் நாட்காட்டி
எழுதியவனால்
22 எழுத மறந்திருக்கலாம்...
ஏன் நாம்கூட
ஆயிரங்களுக்கு
சிலபொழுது
இருபூச்சியங்கள் போடுவதில்லையா?
அதனால் கூட்டுத்தொகை
சரியாகுமா என்ன?

நிச்சயம்
உலகழியும்
டிசம்பர் 22 இல் அல்ல!
அல்லாஹ் அளந்த நாளில்
நிச்சயம்
யுகமழியும்......!


- கலைமகன் பைரூஸ்
2012/12/03 8:03

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக