It It கலைமகன் கவிதைகள்: நாங்களும் காதலிக்கிறோம்...! Meta Tag Generator Tool By digitalyworld.in Instructions: Simply copy the following lines of code and insert them Between the and tags in your HTML Document. Enjoy from digitalyworld.in

திங்கள், 10 டிசம்பர், 2012

நாங்களும் காதலிக்கிறோம்...!


நாங்கள் காதலிக்கிறோம்...
எங்கள் முத்தங்களை
எங்கள் ஸ்பரிசங்களைக்
எங்கள்
இனத்தவர்கள்
கண்டுகொள்வதில்லை
மானிடர்களைப் போல...

எங்கள் முத்தங்களைக்
கண்டு
என்னவென்னமோ கற்பனைகள் புனைந்து
பூச்சியங்கள் பலஇட்டு
காட்டுத்தீ பரப்ப
எங்களவர்கள் என்ன
வக்கிரக் கண்களைக் கொண்டவர்களா?
மானிடர்களைப் போல...

நாங்கள் முத்தங்கள் பரிமாறுகிறோம்!
எங்கள் முத்தங்களிலிருந்து
இசைகள் மேலெழும்
நாங்கள் திருமணம் கட்டுவோம்
குஞ்சுகள் பொறித்தெடுப்போம்

என்றாலும்

எங்களுக்கும்
சாதி நிற வேறுபாடில்லை!
நாங்கள்
கைக்கூலி வாங்குவதுமில்லை
கைக்கூலி கொடுப்பதுமில்லை!

எங்கள்
குறுகுறுப்புச் சத்தங்கள்
மனிதர்களுக்கு
அவர்கள்
விரும்புகின்ற சத்தங்களாக இருக்கலாம்.
நாங்கள்
எங்கள் இனத்தவர்களால்
வெறிபிடித்துப் பிரிக்கப்படாதவர்கள்!

மனிதன்
எங்களிடம் கற்றுக்கொள்ள
எத்தனையோ உண்டு

என்றாலும்
அவனின் அகோதர சிந்தனைகள்
அவனுள் அவஸ்தைகள் உண்டுபண்ண
அவனுக்கே அவன் பொய்யுரைத்து
வாழ்வது எங்களுக்குப் புரிகிறது....

எங்கள் அன்புப் பரிமாணத்தை
பரிவாய் நோக்கி
வாழ்வியலில் புதுப்பாடம்
படிக்க வேண்டாமா மானுடன்

-கலைமகன் பைரூஸ்
2012/12/09 10:50
நன்றி: 'மெட்ோ நிவ்ஸ் ' 21/12/2012

கருத்துரைகள்:

மக்கள் நண்பன்
//எங்களுக்கும்
சாதி நிற வேறுபாடில்லை!
நாங்கள்
கைக்கூலி வாங்குவதுமில்லை
கைக்கூலி கொடுப்பதுமில்லை!//

நெத்தியடி சேர்......சூப்பர்.


Kanapathipillai Prapakaran
// நாங்கள்
கைக்கூலி வாங்குவதுமில்லை
கைக்கூலி கொடுப்பதுமில்லை! //


Fazan Abdul
அருமை நண்பரே..... பிரமாதம் .... நாங்களும் தான் காதலிக்கின்றோமே...ஹ்ம் ம் ம்


Hafiz Haris
 //அவனின் அகோதர சிந்தனைகள்
அவனுள் அவஸ்தைகள் உண்டுபண்ண
அவனுக்கே அவன் பொய்யுரைத்து
வாழ்வது எங்களுக்குப் புரிகிறது....

எங்கள் அன்புப் பரிமாணத்தை
பரிவாய் நோக்கி
வாழ்வியலில் புதுப்பாடம்
படிக்க வேண்டாமா மானுடன் //நிறைய பாடம் கற்றுக்கொள்ளவேண்டும்.


Hafiz Haris
மாஷா அல்லாஹ் மிக அற்ப்புதமான படைப்பு சகோதரரே

கலாநிதி தீண்டா மெழுகுகள்
நானும் காதலிக்கிறேன்

Kanapathipillai Prapakaran
//நானும் காதலிக்குறேன்; இவர் கவிதைகளை// அப்பிடியா ?? 



//மனிதன்
எங்களிடம் கற்றுக்கொள்ள
எத்தனையோ உண்டு.....//
ஆம் அது உண்மைதான். நாம் பறவைகளிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியவை நிறையவே இருக்கின்றன.


//எங்களுக்கும்
சாதி நிற வேறுபாடில்லை!
நாங்கள்
கைக்கூலி வாங்குவதுமில்லை
கைக்கூலி கொடுப்பதுமில்லை!//
nice


Nizam Farook
அருமை அருமை நன்றாக உள்ளது.


Jancy Caffoor
நன்று!

 
Ehamparam Ravivarmah
சிறப்பான கற்பனை

 
Dr.Muttiah Kathiravetpillai Muruganandan
அருமை


//மனிதன்
எங்களிடம் கற்றுக்கொள்ள
எத்தனையோ உண்டு.//

//மனிதன்
எங்களிடம் கற்றுக்கொள்ள
எத்தனையோ உண்டு// arumay valththukal


அதைக் கூட மனிதன் கற்றிடுவானோ என்னவோ!...
இனிய நல்வாழ்த்து சகோதரா....

Seeralan Vee
//நாங்கள்
எங்கள் இனத்தவர்களால்
வெறிபிடித்துப் பிரிக்கப்படாதவர்கள்!//
correct

பகிரங்கமாய் முத்தம்

Ilakkiya Sahi 
//என்னவென்னமோ கற்பனைகள் புனைந்து
பூச்சியங்கள் பலஇட்டு
காட்டுத்தீ பரப்ப
எங்களவர்கள் என்ன
வக்கிரக் கண்களைக் கொண்டவர்களா?

மானிடர்களைப் போல...//
super line naana....

1 கருத்து:

  1. #எங்கள் முத்தங்களைக்
    கண்டு
    என்னவென்னமோ கற்பனைகள் புனைந்து
    பூச்சியங்கள் பலஇட்டு
    காட்டுத்தீ பரப்ப
    எங்களவர்கள் என்ன
    வக்கிரக் கண்களைக் கொண்டவர்களா?
    மானிடர்களைப் போல...#

    நல்ல அடி தான்... வாழ்த்துக்கள் அண்ணா

    பதிலளிநீக்கு