எல்லோரும் எள்ளும் இயலாமை யுன்னில்
ஏற்றமாய் வந்திடவே சென்றாய்நீ பாலை
எல்லோரு மின்று உனையே பேசிட
எமிலின்றி நெடுந்தூரம் சென்றா யன்றோ!
வாய்க்கு வெற்றிலை கெட்டாரு மின்று
வாய்ப்பேச்சிலே எலோரும் மாமேதைகள்
வாய்க்கவிலை உனக்கு ஆவி பிறிந்தனையே!
பால்ய வயதினை மறைத்தனர் பாவிகள்
பாலைநிலத்துச் சென்றிடச் செய்தனர்
பாலாடை போன்ற இளயவள் உனையேற்றி
பாடாய்ப்படுத்தினர் மாபாவிகள் ஐயையோ!
பத்தே படித்தாய்நீ பாரை அறியாய்நீ
பத்தும் பலதும் செய்து பாவைபார்த்தாய்
சத்தியமாய் செய்யாத கொலைக்கு ஆளானாய்
சந்தடியெங்கும் உன்பெயர் வைத்தனையே!
சத்தியம் வெல்லும் என்றார் ஆன்றோர்
சத்தியம் சொல்லி நடந்தது என்னேயுமக்கு
நித்தியமில்லா வாழ்வே சத்தியம் - ஆயின்
நேயமில்லா பாரைப் பார்த்தே சென்றாய்!
வறுமையின் நிறமே சிவப்பெனச் சொல்வார்
வாரார் ஏழ்மை கண்டே இரங்கார் பின்னே
நீறுபூத்த நெருப்பாய் எரிந்திட
முலாம்பூசி
நலம்காண வருவார் அறிந்தாய் சென்றாய்!
அன்பே இலாதாரின் துன்பத்துக் காளானாய்
அன்பைச் சொன்னார் பதியினைத் தேர்ந்தாய்
விண்ணதிர்ந்திட பெற்றாய் தண்டனை நீ
வாழ்வாய் நீ ஈழத்து மகாராணியாக ஏட்டில்!
ஊடகமும் ஊரவரும் உனைக்கொன்ற பதியும்
உப்புச் சப்பில்லாப் பேச்சினை
பேசுவரின்று
நாடகமே நானிலமெங்கனும் நீயிலைகாண
நேயமிலாதாரிடமும் நீயே பேச்சின்கருவாய்!
மதங்கள் முட்டும் உன்பெயர்சொல்லி சோதரி
மாமனிதராகிட பலரும் உன்பெயரைசேர்த்து
வேதங்கள் பல பேசுகின்றார் வேகாதனவாய்
வாழ்வாய் என்றும் மனிதருள் மரகதமாய்
நீயே!
-கலைமகன் பைரூஸ் (வெலிகம)
==கருத்துரைகள்==
Prahasakkavi Anwer==கருத்துரைகள்==
nice
Str Tappai Alippom
Ithu ponra ETANAYO RIzanakal PALASTINIL uruwahurargal nalantam.atai patri kawalaipada ewarukum thuppilai ippo rizanaku kawala teruwikanga.AMERICA NAIGAL OLIYA WENDUM ISrel Walapunigal sahadikappada wendum....YA ALLAH!!
Siva Ramesh
nice
Mohamed Awn
Nice
Fiyas Mohamed
Nalla kavi vaalthukkal.
Muhammed Ariff
thank's 4 you;r kavithai....i'ts good
Varuni Krishna
அருமை
Thenammai Lakshmanan
arumai
மக்கள் நண்பன்
wonderful sir...
Karunanithy Yasothiny
kanneruda aval perumai unarthum kavi varikal
தடாகம் கலை இலக்கிய வட்டம்
//வறுமையின் நிறமே சிவப்பெனச் சொல்வார்
வாரார் ஏழ்மை கண்டே இரங்கார் பின்னே
நீறுபூத்த நெருப்பாய் எரிந்திட முலாம்பூசி
நலம்காண வருவார் அறிந்தாய் சென்றாய்!//
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக