It கலைமகன் கவிதைகள்: பைத்தியம் எவரையா ஞானவானே!

வெள்ளி, 18 ஏப்ரல், 2014

பைத்தியம் எவரையா ஞானவானே!


செய்தவறு நீக்கமறச் செயவியலாது
செய்யாக் குற்றம்  பெரிதெனக்கண்டு
ஏய்கின்றார் அம்பு எடுப்பாகத்தான்
ஏற்றமிலை அவ்வம்பில் காண்!

பசுத்தோல் போர்த்தி பாரிலாடி
பேர்பெற்றவன் நானென் றாடி
விசுவாசமிலா கருமங்களி லோடி
விழிகலங்கி எய்கின்றா னம்பு!

பைத்தியம் பெரிதான பின்னேங்கி
பெரும்பாவி போலல்லாடி யோடி
நித்தமும் கலங்குவது ஏனோ
நிதர்சனம் ஏதென்பது காண்!

தன்குற்றம் காணாது பிறர்குற்றம்
தரணியிலே பெரிதெனக் கண்டு
நின்பைத்தியத்திற் கீது மருந்தென்று
நினைந்தேற்றும் அம்பும் அம்பா?

பிறர்க்காக பிரசங்கம் பலசொல்லி
பிறர்மனம் புண்படவே பலசெய்து
இறவாது நெஞ்சத்தில் நின்றவர்
இம்சைதான் செய்வர் பலனோ?

பைத்தியமே இலாதவனை நோக்கி
பைத்தியம் நீயென்று செப்பி
இத்தரையில் குற்றம் இழைத்தாலும்
இம்மியும் காணான் பாவம்நீயே!

-தமிழன்புடன் கலைமகன் பைரூஸ்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக