சந்த வசந்தத்திற்காக எழுதுகின்ற தனிப்பாடல்கள் இங்கு இடம்பெறும். கவிதைகள் கண்டு தட்டிக் கொடுப்பது - பிழைகளை இதமாகத் தட்டித் தர வேண்டியது சான்றோர் கடமை.
பாடல் 01
உள்ளத்துள் தோன்றி, உயர்குணங்க ளிணைந்து
உலகத்தார்க் குதவிடும் நல்லெண்ணம் நிறைந்து
தெள்ளத் தெளிந்த அறம்செய்து நற்சுவர்க்கம்
தேடிட முயல்வர் அறிவோரே!
-கலைமகன் பைரூஸ்
13.02.2015
பாடல் 02
புல்லுக்குப் பொசியும் நீரன்னதாய் உருமாறி
புவியினின் நல்லோர் பசித்தவர்க் குதவி
நல்லறத்தான் நன்மை மிகவுண்டு என்றுள்ளி
நாளும் செய்வர் நல்லறமே!
-கலைமகன் பைரூஸ்
15.02.2015
பாடல் 03
அகத்தார் வாழ்வதற் கனுதினம் இனிதுன்னா
அறத்தினை யிகழ்ந்து அழிவன சேர்த்தின்னா
சகத்தினின் செய்வார் செயல் தீதன்றோ
சற்குணர் செய்வரோ ஈது!
-கலைமகன் பைரூஸ்
17.02.2015
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக