காத்திருப்புகளும் எதிர்பார்ப்புகளும்
உதிக்குமே என்றென்றும்
கானலின் தூரலாய்
துயிலின் மத்தியிலே...........
நிறைவேறா ஆசையை
நிறைவேற்றும் யுத்தியாய்
மானிடரை மூழ்கடிக்கும்
மந்திரமான வலையதுவே.........
எட்டிப் பிடிக்கா கற்பனையை
எளிதாக நிகழ்த்தச்செய்து
நொடிப்பொழுதில் மறைந்திடும்
சுகமான மாயையது..........
திடுக்கிடும் காட்சியதை
திகட்டாமல் தந்து
திகிழுறச் செய்யும்
சிந்தனாச் சக்தியது...........
சந்தோசத்தை வழங்கி
துக்கத்தைச் சொரியும்
கற்பனாக் கடல்
மானிடர்க்கே உரித்தானதோ?
-மௌலவியா றுஷ்தா இப்ராஹீம் (பீ.ஏ)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக