சிசுப் பருவம் முதல் சிரசுபழுத்து
பாடையினின் போகுமட்டும்
மனுக்குலத்திற்காக உழைத்த
தருக்களில்
பாவி மனிதன்
காமுற்று கற்பழித்ததால்
நீர் கருச்சிதைவாகின…
ஓங்கி உயர்ந்த பருவதங்கள்
இது கண்டு
கடும் வக்கிரத்துடன்
மனுக்குலத்திற்காக உழைத்த
தருக்களில்
பாவி மனிதன்
காமுற்று கற்பழித்ததால்
நீர் கருச்சிதைவாகின…
ஓங்கி உயர்ந்த பருவதங்கள்
இது கண்டு
கடும் வக்கிரத்துடன்
தன் பெருங்கனலைக்
கொட்டித்தீர்த்தன…
நீங்கள் செய்யும் அடாவடித்தனங்களுக்கு
எங்களால் என்னதான் செய்யமுடியும்
என நிலம்
நீர்ச்சிசுவைத் தரமறுக்கிறது…
எங்களால் என்னதான் செய்யமுடியும்
என நிலம்
நீர்ச்சிசுவைத் தரமறுக்கிறது…
நிலம் மலட்டுத்தன்மை அடைந்த பிறகு
நீர்க்குழந்தை கேட்டு அடம்பிடிப்பதில்
துளியும் பிரயோசனமில்லை…
நீர்க்குழந்தை கேட்டு அடம்பிடிப்பதில்
துளியும் பிரயோசனமில்லை…
மனிதன் நன்றி மறந்ததால்
நிலத்திற்கு குற்றம் சொல்லி
ஏது பயன்?
நிலத்திற்கு குற்றம் சொல்லி
ஏது பயன்?
-கலைமகன் பைரூஸ்22.03.2016
---------------------------------------------------
கண்ணிருந்தும் கபோதியாய் மானுடன் மண்ணினிலின்று
காடைத்தனம் கானத்துத் தருக்களுக்குச் செய்வதாலே
புண்ணிய தீர்த்தந்தான் பயந்ததோ - கடும்கோடையீந்து
பார் செய்ந்நன்றி இதுதானா உனதென்றுதான் கேட்குதோ?
காடைத்தனம் கானத்துத் தருக்களுக்குச் செய்வதாலே
புண்ணிய தீர்த்தந்தான் பயந்ததோ - கடும்கோடையீந்து
பார் செய்ந்நன்றி இதுதானா உனதென்றுதான் கேட்குதோ?
-கலைமகன் பைரூஸ்22.03.2016
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக