உள்ளத்து ளுயிராய் வந்தாய்
உதிரத்து ளொன்றாய் கலந்தாய்
கள்ளுண்ட வண்டா யானேன்
கனிமொழி யுன்னிளமை கண்டேன்!
இதழொடு இதழ் பதித்தாய்
இதமாக இதழ் குவித்தாய்
காதலா லுன்னில் பித்தாகி சித்திரித்தேன்
காதலியே என்றுமென்னுள் நீயே
வேண்டும்!
வேண்டும்!
முத்தீ வளர்த்த சங்கத்தாளே – உன்
முன்னழகும் கண்ணுக்குள் சித்திரமாக!
சித்திபெற்ற சுந்தரியாள் நீ – எங்குமெதினும்
சிந்துவேன் நின்புகழ் ஞாலமீது மணியாக!
புள்ளுறங்கும் கணமதுவும் பூவே நீ!
புழுங்குகின்றேன் பாரிலுன் நிலைகண்டு – யாண்டும்
நில்லாத நிலத்தினிலும் நீநிமிர வேண்டும்
நினையென்றும் நினைத்திடுவேன் நானே!
உயிர்மெய்யா யென்னக மிணைந்தாய் - நின்
உயிர்த்துடிப்பதை ஆய்தமாய் வைத்தாய்!
ஆயுதமீந்து மெலிதெனை வலிதாக்கினாய்
ஆகாரமேனோ இடையுந் தானுன்னில் கண்டக்கால்!
புல்லர்களுன் சத்தான இளமைகண்டும் - பூவே
புரியாமல் தலைகாலது பொய்செய்குவை!
மல்லர்தானு முனையிகழ்ந்தால் ஞாலமீதில் - நின்
மடிவீழ்ந்து சரண்புக வீழ்த்திடுவேனே!
என்னிலக்கணமே நினதெழில் பைம்பூணாமோ?
எழுதுகின்றேன் நினதெழில் எழுதுகின்றேன்
உன்னை விண்ணதிரப் போற்றி யெழுதுகின்றேன்
உயிராய் வருக! என் தமிழ்க்கனிகை நீயே!
- கலைமகன் பைரூஸ் (2012/08/04)
இலங்கை
நன்றி
# முத்துக்கமலம்
# தினகரன் வாரமஞ்சரி
# எழுத்து
கருத்துரைகள் -
தந்தனை தமிழினை வாழ்த்தி நீ கவிதை
விந்தையே காட்டி
வார்த்தையில் நனைத்தனை
வெல்லுக செல்லுக
இனும் நெடுந்தூரம்
அள்ளுக பெரும்புகழ்
செலும் வழியாவும் -
Najmul Hussain
Manager at Shooters
Studied at Hameed Al Husseinie College
Lives in Battaramulla
Married to Noorulain Hussain
From Colombo, Sri Lanka
---------------------------------------------------------------
அருமையான சொல்லாடல்
சிலேடையாக விளையாடுகிறது.
சங்கத்தாள்மீது கொண்ட முப்பற்று தீயாயெரிகிறது!
தமிழ்ப்பற்றும் தமிழறிவும் தானாக விரிகிறது!
அதுசரி, சங்கத்தாளிலும் தமிழ்க்கனியிலும்.....
யாரைத் தொக்கவைத்துள்ளீர்கள்...?
வாழ்த்துக்கள்! உங்கள் தமிழ் ஆளுமைக்கும் புலமைக்கும்!!! 05/03/2016
Sivalingam Arumugam
Former Commissioner of Examinations atDepartment of Examinations, Sri Lanka
Studied Master's Degree in Economics atUniversity of Peradeniya | Lives in Colombo, Sri Lanka |From Jaffna
----------------------------------------------------------------------------------------------------------------
அள்ளித்தான் பருகினாய் அவள் மெய்யழகை
கள்ளமின்றி கட்டுரைத்தாய் பேரெழிலை
ஆற்றாமை உள்ளத்தை அழகு தமிழால் வடித்தனை
கூடி இன்புறப் புகும் வாயில் தான் வாய் முத்தம்
தேடிப்பெறும் அவள்அமுத ஊற்று இதழ் அமுதம்
வாடிடாது வந்திடவே ஆற்றாமையில் அழைக்கின்றாய்
தமிழ்ச் சொற்கள் தக்கதாய் இட்டே இன்கவி
காதற்சுவையில் கனிவாய் இட்டாய் கலைமகன்தான்
கைவண்ணம் நனியழகே பாவில் காண்பது
Baskaran Ranganathan
Retired
Studied at Anna University
Lives in Ambattur

From Chennai
----------------------------------------------------------------------------------------------------------------
அருமையான வாசிப்பு அனுபவம்
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி
நல்ல அருமையான் கவிதை.அத்தோடு ஒரு சிறிய வேண்டுகோள்.கவிதையை இன்னும் கொஞ்சம் எளிமை படுத்தினால் தமிழ் மீது ஆர்வம் கொண்டும் தமிழிலக்கணம் அறியாத எம்மை போன்ற பலருக்கும் புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.வாழ்க தமிழ்.வாழ்க உங்கள் தமிழ் பணி
பதிலளிநீக்குநல்ல அருமையான கவிதை.அத்தோடு ஒரு சிறிய வேண்டுகோள்.இன்னும் சற்று கவிதையை எளிமைப்படுத்தினால் தமிழ் ஆர்வம் இருந்தும் தமிழிலக்கணம் அறியாத எம்மை போன்ற பலருக்கு பயனுள்ளதாக இருக்கும்.வாழ்க தமிழ்! வளர்க உங்களது தமிழ்பணி
பதிலளிநீக்கு