அன்னை தந்தை தன்பிள்ளை அருமந்த பிள்ளையாய்வரவே
என்றும் நல்லன வியற்றுவர் தம்முயிர் வாட்டியேதான்
மண்ணினின் சிறந்தோன் தன்பிள்ளையே யெனக்கேட்க இவர்
பொன்பெற்றதாய் நினைவர் பாரினி லுயர்ந்தோர் பெற்றோரே
-கலைமகன் பைரூஸ்
கருத்துரை
----------------
பெற்றோர் கடன் தன்பிள்ளையை அவைமுன் இருத்தலன்றோ
நற்றாய் இனிதே செப்பும் தமிழ்மறைத் திருக்குறளும்
பெற்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனை சான்றோனாய் கேட்க
நற்றவமே இத்தகு பிள்ளைகள் வாய்த்திட இறையருளால் தானே
உற்ற கருத்தை எளிதாய் இட்டாய் யாவரும் அறிய கலைமகன் நீ.
-புலவர் பாஸ்கரன் ரங்கநாதன் (Baskaran Ranganathan)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக