It It கலைமகன் கவிதைகள்: தட்டுங்கள் திறக்கட்டும் தீப்பொறி பறக்கட்டும் Meta Tag Generator Tool By digitalyworld.in Instructions: Simply copy the following lines of code and insert them Between the and tags in your HTML Document. Enjoy from digitalyworld.in

திங்கள், 20 ஆகஸ்ட், 2018

தட்டுங்கள் திறக்கட்டும் தீப்பொறி பறக்கட்டும்

தடாகப் பன்னாட்டுப் படைவிழாவின் கவியரங்கிற்காக எழுதிய கவிதை. காலதாமானால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. என்றாலும் என் தளத்தில் ஏற்றி புளகாங்கிதம் அடைகிறேன்.

தட்டுங்கள் திறக்கட்டும் தீப்பொறி பறக்கட்டும்
தெங்கு வளர்ந்தோங்கும் தென்னகத்திருந்திங்கு
தௌ்ளு தமிழில் தெவிட்டாக்கவிபாடிடயான்
மங்காப் புகழுடையோர் முன்னேநாபிறழாமல்
மாண்புறு கவிபாடிட மாபெரியோன்நீயேதுணை!

தலைநிமிரக் கவியெழுத தண்கவிதை யான்புனைய
தகையெலாம் எனக்கீந்த தக்கபெரியோனே போற்றினேன்!

நிலையிலா நிலமீதில் நானுந்தான்கவிபாட விழாவீதில்
நல்லோர்நிறை அவைநடுவண் கவிபாட அருள்கூர்ந்த
நற்றடாகக் கலைமகளார் ஹிதாயாவைப் போற்றினேன்!

நற்றமிழில் காதல்மிக்கோன் தண்டமிழ் ஆற்றல்மிக்கோன்
நற்றலைமை கவிகுவைத் வித்தியாசகரைப் போற்றினேன்!

பன்னாட்டுப் படைவிழாவில் பாக்காதல் கொண்டோரே
பழகுதமிழில் காதல்கொண்டு பாங்காயமர்ந்துள அவையோர்காள்
பன்னாட்டுப் படைவிழாவில் பாங்காகக் கவிசொலவந்துள
பாவலர்காள் அனைவர்க்கும் பண்ணவன்துணையே - ஸலாம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹ_


பழுதிலாக்கவிவாணர் சூழ்ந்தே பாங்காயமர்ந்துள அவையில்
பழுதுண்டென்கவியில் கற்களுந்தான் பலவுண்டு பிழைபொறுத்தே
விழுதாக கரகோசம்தாமீந்து கவியுண்டுதாங்களிப்பீர் அவையோர்காள்
வெற்றிநடை போடுதற்கு வீறுடையோர் ஆதரவுதானீவீர்கள்!
தட்டுங்கள் கரங்களைத்தான் கரகோசம் வானுயர்ந்தோங்க
‘தட்டுங்கள் திறக்கட்டும் தீப்பொறிதான் பறக்கட்டும்’ பாடுகிறேன்!

-------------------

பூத்துச் சிரித்துப் புன்னகை தான்பொலிந்து
பூதலத்து பவனிவரும் பல்லோரின் கதைகள்தாம்
சொத்து இழந்து சோபை இழந்து சாப்போலிங்கு
சொந்தங்கள் பேரளவில் பேராளர்மாநாடாய் இங்கு
தட்டுங்கள் திறக்கட்டும் தீப்பொறிதான் பறக்கட்டும்
தண்ணளியொடு சேர்ந்தே சொந்தங்கள் தாமிணைய!

கல்விப்பாலருந்தி காசினியில் கற்றுயர்ந்து வாழவுள
சிறுவர்பலர் வஞ்சகத்தார் வலையினிற்சிக்கி மானாய்
சொல்லொணாத் துன்பந்தான் பெறுகின்றார் ஐயையோ
சொல்லற்றான் சோகந்தான் சொல்வதுதான் எங்ஙனமோ?
தட்டுங்கள் திறக்கட்டும் தீப்பொறிதான் பறக்கட்டும்
தம்பிள்ளையாய் எண்ணி உளத்து வேசங்கற்றானீங்க...

நற்கருமம் நயந்திங்கு நல்மங்கையார் ஆற்றிடத்தான்
நன்னாமம் கொண்டோரும் நயமாகப் பிழிகின்றாரவரை
பொற்பாதம் பணிகவென்றே பண்ணவ னருளினன்
பொற்பாதத்துச் சுவனமென்றே அருமறையின் கூறினன்
தட்டுங்கள் திறக்கட்டும் தீப்பொறிதான் பறக்கட்டும்
தங்கமென வைரமென ஏத்திடுவம் மங்கையரைநாம்!

தண்டமிழின் தரமின்று தகைபற்றி யேதுசொல்வன்?
தரமான நற்றிமிழின் வாசந்தான் அருகியதே
முண்டாசுக் கவிபோலக் கவிபாட வல்லோர்சிலரே
முணியாது நற்றமிழை நானிலத்து நீட்டிடுவோர் சிலரே
கண்ணாகத் தண்டமிழை ஏத்தியே கற்றிடப்பலரும்
கனமாகத்தான் உழைக்க வேண்டும் - ‘ஒலக்க’யாயல்ல

பாதையில் பாங்காகப் பவனிவரும் நல்நங்கைதானுற்று
பாதைமாறி உளம்மாறிப் போவதுதான் நம்மாடவர்செயல்
காதைபல சொல்லிடுவான் காவியங்களியற்றிடுவான்
கண்ணூரிலாமலே முகநூலில் மேய்ந்திடுவான் - பூவையரை
கசக்கியே நாற்றமெடுக்க பலவும்செய்து பாஸாகிடுவான்
இந்நிலைமாற்றிடவே வேண்டும் ஆற்றுப்படுத்தல் வேண்டும்
தட்டுங்கள் திறக்கட்டும் தீப்பொறிதான் பறக்கட்டும்...!


நாளும் ஐட்டங்கள்தான் பார்த்து டெலிபோன்பில்தானுயரும்
நாளும் ஐட்டங்களுக்குத்தான் ஃபேஸ் புல்லாய் காலியாகும்
நாளும் துன்புற்றுதான்வளர்த்த நற்றாய் எந்தை அகம்குளிர
ஏதும்செய்வானோ மனந்தான்விடுமோ பேதையர்க்கு அப்பாடா
நாதியிலாதேஉள நம்மவர்தான் விழிப்படைய நாமிங்கேனும்
தட்டிடுவோமவர்க்காக தீப்பொறியாய் நெஞ்சத்திற்பாய...

நற்கதிதந்திடு மறத்திற்காய் நாளும் நல்லனசெய்திடவே
நாடிவருவா ரெத்தனைபேர் நம்மவரிட்டான்... நலமாக
நாதியற்று ஓர்மூலையில் முடங்கியிருந்தே மறையிறையை
நாளும்ஏத்துவார்க் கேதுசெய்தோம் இனியுந்தான் இந்நிலையோ
நாடிபிடித்தவர் அவலங்கள்நீங்கிடவே தேசத்தினின் அலைந்து
நலமாக நல்லனதான் ஆற்றிடுவோம் அதற்காய்நாம்
தட்டிடுவோம் மனங்களிற்றான் தீப்பொறியாய் பணிசெயவே....

புண்டரீகத்தினுமினிதாம் புவியிற்றான் நற்றமிழேதான் - சான்று
படையாகவந்துள்ள பாவலர்கள்தான் இதற்குச்சான்று
சண்டையிலை அழுக்காறவா வெகுளியிலை எம்மிற்றான்
சந்தத்தமிழில் ஒன்றிணைந்து தமிழ்க்கு பணியாற்றத்தான்
சந்தித்தோம் சந்தியேபோற்றும் இந்நாளெம்மில் நிலையேதான்
சான்றோரைப் போற்றியே சகத்து நற்றமிழை ஏத்துவோம்நாம்!

புதுக்கவிதையொடு மரபையென்றும் ஏத்துவம் - நம்மூலத்தை
பக்குவமாய்ப் பிறர்க்கு எடுத்துச்சொல்வம்... நல்லனவாற்றும்
பேதையரைப் போற்றுவம்.. அவர்பணிநின்றுமின்ன ஏத்திடுவம்...
பிழிந்தசாற்றில் ஒன்றிரண்டே பகர்ந்தேன்.. பிழையுளதோஅறியேன்
பக்குவமாய் அடியேனின் கவிகேட்டுநின்றார்க்கும் கொட்டாவிவிட்டார்க்கும்
பகர்ந்தேன் நன்றி... தட்டுங்கள் கைகளைத்தான் கேட்டேஎடுத்தேன்...
தீப்பொறி பறக்கவல்ல தண்டமிழின்வாசம்வீச... விடைபெற்றேன்நான்...

தமிழன்புடன்,
உங்கள் கலைமகன் பைரூஸ்
18.08.2018


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக