பிறந்தது நானும் நீயும் அம்மணத்தோடு...
பிதற்றுகின்றாய் இன்று நீ
பெருச்சாளி நானென்று...
உச்சாணியில் இருப்பதாய்ச் சொல்கிறாய்
உன்சாதிதான் பெரிதென்கிறாய்...
உன் கருமங்களை ஆற்றிக்கொள்ள
நான் - நாங்கள் - எம்மவர்
உனக்கு - உங்களுக்கு
பத்தரை மாற்றுத் தங்கம்....
கருமம் முடிந்ததும்
தங்க முலாம் பூசிய இரும்பு...
ஒன்றை மட்டும் நினைவிற்கொள்
நீயும் நானும்
போகுமிடமும் ஒன்றுதான்
என்னதான் தம்பட்டம் அடித்தாலும்
வந்த வண்ணமே
அம்மணத்துடனேயே செல்வோம்...
ஆட்டம் எல்லாம்
ஆவி அடங்குமட்டுந்தான் நண்பா...
ஒன்றுமட்டும் உண்மை நண்பா!
உனக்கு முன்
நான் சுவனம் செல்வேன்...
ஏன் என்று வினாதொடுப்பது
என் காதுகளுக்குக் கேட்கிறது...
'நான் சாதி பார்த்து
யாரையும் ஒதுக்கவில்லை...'
-தமிழன்புடன்,
கலைமகன் பைரூஸ்
04.09.2018 - 10.57
பிதற்றுகின்றாய் இன்று நீ
பெருச்சாளி நானென்று...
உச்சாணியில் இருப்பதாய்ச் சொல்கிறாய்
உன்சாதிதான் பெரிதென்கிறாய்...
உன் கருமங்களை ஆற்றிக்கொள்ள
நான் - நாங்கள் - எம்மவர்
உனக்கு - உங்களுக்கு
பத்தரை மாற்றுத் தங்கம்....
கருமம் முடிந்ததும்
தங்க முலாம் பூசிய இரும்பு...
ஒன்றை மட்டும் நினைவிற்கொள்
நீயும் நானும்
போகுமிடமும் ஒன்றுதான்
என்னதான் தம்பட்டம் அடித்தாலும்
வந்த வண்ணமே
அம்மணத்துடனேயே செல்வோம்...
ஆட்டம் எல்லாம்
ஆவி அடங்குமட்டுந்தான் நண்பா...
ஒன்றுமட்டும் உண்மை நண்பா!
உனக்கு முன்
நான் சுவனம் செல்வேன்...
ஏன் என்று வினாதொடுப்பது
என் காதுகளுக்குக் கேட்கிறது...
'நான் சாதி பார்த்து
யாரையும் ஒதுக்கவில்லை...'
-தமிழன்புடன்,
கலைமகன் பைரூஸ்
04.09.2018 - 10.57
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக