இன்று, மரபுக் கவிதை எழுதுபவர்களின் எண்ணிக்கை விரல் விட்டெண்ணக் கூடியதாகவே உள்ளது. மரபுக் கவிதை எனும் பெயரில் அவர்களில் பெரும்பாலானோர் எழுதுகின்ற பாடல்களின் யாப்பு இருக்கின்றதா?எனக் கேட்டால் .... விடையாக வருவது இல்லை என்பதே. இலங்கை எழுத்தாளர்களில் மரபின்பால் ஈர்ப்புக் கொண்டு,காப்பியங்கள் படைத்தவர்களும் இல்லாமலில்லை. எனதாசான் 'காப்பியக்கோ' ஜின்னாஹ் ஷெரிபுத்தீன் அவர்கள் பல காப்பியங்களை தமிழ்கூரும் நல்லுலகிற்குத் தந்து, தனக்கென ஓரிடத்தை ஒதுக்கிக் கொண்டுள்ளார்.
சீரிய மரபின் பல்வேறு பாவமைப்புக்களில் கவிதை பாடுவோரில் ஒருசிலரின் கவிதைகள் என்னுள்ளத்தை தினமும் ஈர்க்கின்றன.
1993 இல் தினகரன் பத்திரிகையில், 'கலையுலகம்' பகுதியில் என்னைப் பற்றிய தகவல்...தினகரன் பத்திரிகையி்ல் 'கலையுலகம்' பக்கத்தில் தே. செந்தில்வேலவர் அவர்கள் அன்று பங்களித்திருந்தார்.