It It கலைமகன் ஆக்கங்கள்: என்னைப்பற்றி ஏனையோர் Meta Tag Generator Tool By digitalyworld.in Instructions: Simply copy the following lines of code and insert them Between the and tags in your HTML Document. Enjoy from digitalyworld.in
📰 புதிய பதிவுகள்
Loading recent posts...
என்னைப்பற்றி ஏனையோர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
என்னைப்பற்றி ஏனையோர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 24 ஜனவரி, 2026

கலைமகன் பைரூஸ் – தமிழ் இலக்கியம், விருதுகள் மற்றும் படைப்புகள்

கலைமகன் பைரூஸ் – தமிழ் இலக்கியம், விருதுகள் மற்றும் படைப்புகள்

கலைமகன் பைரூஸ் தமிழ் இலக்கியம், கல்வி, மொழிபெயர்ப்பு மற்றும் டிஜிட்டல் ஊடகப் பணிகளை ஒருங்கிணைத்து செயல்படும் எழுத்தாளரும் சமூகச் செயற்பாட்டாளரும் ஆவார்.

🏆 விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்

1993 தினகரில் என்னைப் பற்றி | கலைமகன் பைரூஸ்

 1993 இல் தினகரன் பத்திரிகையில், 'கலையுலகம்' பகுதியில் என்னைப் பற்றிய தகவல்...தினகரன் பத்திரிகையி்ல் 'கலையுலகம்' பக்கத்தில் தே. செந்தில்வேலவர் அவர்கள் அன்று பங்களித்திருந்தார். 

கட்டுரையில் இருந்த தகவல் - 

கலையுலகிற்கு ஒரு கலை
------------------------------------------
பொன்னீழத்தின் தென்னிலங்கையில் ஒரு நகரமாய் விளங்கும் வெலிகாமம் நகரத்தின் மேற்கே அமைந்துள்ள மதுராப்புர என்னும் கிராமந்தான் இந்தக் கலையின் பிறந்தகம்.

வெள்ளி, 1 நவம்பர், 2013

எனை வைத்து நகைச்சுவை விருந்து படைத்தார் பாருங்கள்!

என்னாசான் இயற்றமிழ் வித்தகர் மர்ஹும் வித்துவான் எம்.ஏ. ரஹ்மான் அவர்கள், நவமணி வாரப் பத்திரிகையில் 2001 - 09 - 30 இல் எனையும், கல்முனைக் கலீலையும் உவமித்து நகைச்சுவை விருந்து - 01  படைத்திருந்தார்.

என் ஆக்கங்கள் பத்திரப்படுத்தப்படும் ஏட்டில், அதைக் காணுங்காலையெலாம் எனையறியாமலேயே வருகிறது எனக்குள் சிரிப்பொலி....!

திங்கள், 2 செப்டம்பர், 2013

'கலைமகன் கவிதைகள்' (நிழலும் நிதர்சனமும்) கவிதைத் தொகுப்புக்கு முஸ்லிம் கல்வி ஸ்தாபனத் தலைவர் எஸ்.எச். மௌலானாவின் கருத்துரை

சமுதாய உறுத்தல்களால் உருவானதே ‘கலைமகன் கவிதைகள்’
- முஸ்லிம் கல்வி ஸ்தாபனத் தலைவர் 

கலைமகன் பைரூஸின் படிக்குந்தோறும் இனிமை பயத்திடும், சலசலவென்ற ஓசைநயம் மிக்க ‘கலைமகன் கவிதைகள்’ கவிதைத் தொகுப்புக்கு கருத்துரை வழங்குவதில் முஸ்லிம் கல்வி ஸ்தாபனத் தலைவர் என்ற வகையில் பேருவகை அடைகின்றேன்.

இதயம் கனக்கின்ற பொழுதுதான் கவிதைகள் வருகின்றன.

‘எப்போதும் வருவதில்லை கவிதை

ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

'கலைமகன் கவிதைகள்' (நிழலும் நிதர்சனமும்) கவிதைத் தொகுப்புக்கு பன்னூலாசிரியர் கலைவாதி கலீலின் அணிந்துரை

கவியிலக்கணங்களுடன் கூடிய கலைமகன் கவிதைகள்
முன்னாள் உப பீடாதிபதி கலைவாதி கலீல்

கவிதை என்பது வட்டமிட்டுச் சிறகடிக்கும் வண்ணத்துப் பூச்சி போன்றது. வண்ணத்துப் பூச்சியின் சுயாதீனப் போக்கும் அதன் வேகமும் விறுவிறுப்பும் வித்தியாசமான அசைவுகளும் அழகும் மெலிதான நறுமணமும் நமது மனம் கொள்ளத்தக்கன.

கவிதையின் வடிவம் பற்றிய என் கணிப்பீடு இதுதான். கவிதையின் வடிவம் இப்படித்தான் இருக்க வேண்டுமென்று சில வரையறைகள் உள. அவை அசை, சீர், தளை, தொடை, எதுகை, மோனை என்பனவாம். இவை

சனி, 31 ஆகஸ்ட், 2013

'கலைமகன் கவிதைகள்' (நிழலும் நிதர்சனமும்) கவிதைத் தொகுப்புக்கு பன்னூலாசிரியர் திக்குவல்லை ஸப்வானின் அணிந்துரை

கவினுறு கவிதைகளும் கலைமகனும்
பன்னூலாசிரியர் திக்குவல்லை ஸப்வான்

கலைமகன் பைரூஸின் கவினுறு கவிதைத் தொகுப்புக்குக் கருத்துரை வழங்குவதில் பெருமையடைகின்றேன். கவித்துறையில் அன்னாருக்கு உள்ள முதிர்ச்சியை, உயர்ச்சியை இக்கவித்தொகுப்பு கட்டியம் கூறி நிற்கின்றது. கவி இலக்கணத்தைக் கரிசனையோடு காத்து அவர் படைத்துள்ள கவிதைகள் அனைத்தும் அற்புதமான சொற்புதையல்கள்.