It It கலைமகன் ஆக்கங்கள்: 1993 தினகரில் என்னைப் பற்றி | கலைமகன் பைரூஸ் Meta Tag Generator Tool By digitalyworld.in Instructions: Simply copy the following lines of code and insert them Between the and tags in your HTML Document. Enjoy from digitalyworld.in
📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

சனி, 24 ஜனவரி, 2026

1993 தினகரில் என்னைப் பற்றி | கலைமகன் பைரூஸ்

 1993 இல் தினகரன் பத்திரிகையில், 'கலையுலகம்' பகுதியில் என்னைப் பற்றிய தகவல்...தினகரன் பத்திரிகையி்ல் 'கலையுலகம்' பக்கத்தில் தே. செந்தில்வேலவர் அவர்கள் அன்று பங்களித்திருந்தார். 

கட்டுரையில் இருந்த தகவல் - 

கலையுலகிற்கு ஒரு கலை
------------------------------------------
பொன்னீழத்தின் தென்னிலங்கையில் ஒரு நகரமாய் விளங்கும் வெலிகாமம் நகரத்தின் மேற்கே அமைந்துள்ள மதுராப்புர என்னும் கிராமந்தான் இந்தக் கலையின் பிறந்தகம்.
'கலைமகன்  பைரூஸ். மதுராபுரத்தான், பனிமலர், வெலிகம இளங்கவி' போன்ற புனை பெயர்களைக் கொண்டு எழுதிவரும் மதுராப்புர கலைமகன் பைரூஸ் அவர்கள், கலையுலகம் பெற்றெடுத்த வரப்பிரசாதமாகும்.
1985 ஆம் ஆண்டு முதலாவது கட்டுரை மூலம் (தனது 11 ஆவது வயதில்) தினகரன் 'சிறுவர் உலகம்' மூலம் ஆரம்பித்து தற்போது தினகரன், வீரகேசரி, மித்திரன், பத்திரிகைகளிலும் மின்சாரம், விடிவௌ்ளி போன்ற சஞ்சிகைகளிலும் தனது ஆக்கங்களைச் சமர்ப்பித்து வருகிறார். 
தற்போது மாறை/அறபா மத்திய கல்லூரியில் 12 வர்த்தகப் பிரிவில் கல்வி கற்றுவரும் இவர், நாடறிந்த எழுத்தாளரும் கவிஞருமான 'அறிவுத்தாரகை' எம்.எச்.எம் ஷம்ஸ் (பீ.ஏ) அவர்களின் சீடர்களில் ஒருவராவார்.
தனது சொந்த முயற்சியில் இள வயதிலும் தனது புனைபெயரில் (பனிமலர்) ஒரு ரோணியோ இலக்கிய இதழை வௌியிடுவதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறார். இதற்காக இவர், இளம் எழுத்தாளர்களினதும், மற்றும் எழுத்தாளர்களினதும்  சிறந்த கட்டுரை, கவிதை, சிறுகதைகளை எதிர்பார்த்து நிற்கின்றார். மேலும் கலையுலக வாசகர்களினதும் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றார்.
எதிர்காலத்தில் சிறந்ததொரு கவிஞராக  வர வீறுநடை போட்டுக் கொண்டிருக்கும் 'பாமா' அவர்களின் நூலுக்கான ஆக்கங்களை அனுப்ப வேண்டிய முகவரி
கலைமகன் பைரூஸ்
'ரிஸானா மன்ஸில்', மதுராப்புர, தெனிப்பிட்டிய, வெலிகாமம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக