நிலையிலா வாழ்வு பற்றிக் கற்றிட
நிலையிலா வையம் பற்றிக் கண்டிட
இலைநீரே அழகாய் வந்தனைநீ - போழ்தில்
இறங்கிவிடுவாய் என்பதறி சீராய் நீ!
அழகுள்ள பொருளெலாம் பவ்வியமாய் நாம்
அழகாய்க் காக்கின்றோம் உரைக்கிறோம் பொய்
பழுதே உளது எனக்கண்டும் பொய் யுரைத்து
படுகின்றோம் பாடு! பயனிலை காண்பீர்!
பசேலென்ற அழகுக்கு அடிமையாகி நாம்
பண்பிலாத உறவுகளுக்கும் அடிமையாகி நாம்
நேசமிலா தாரின் போலிக்குள் கட்டுண்டு
நாதியற்றுப் போகின்றோம் மனமே தெளி!
மின்னுவ தெல்லாம் பொன்னாமோ நிலத்தில்
மின்னன்ன பேதையரும் போலி - மண்ணில்
சொன்னவை யொன்று செய்வது மற்றொன்று
சொர்க்கமே அல்ல பூமி நாம்சீராய்த் தெளிவோம்!
-கலைமகன் பைரூஸ் 2013-04-13 5:20
நிலையிலா வையம் பற்றிக் கண்டிட
இலைநீரே அழகாய் வந்தனைநீ - போழ்தில்
இறங்கிவிடுவாய் என்பதறி சீராய் நீ!
அழகுள்ள பொருளெலாம் பவ்வியமாய் நாம்
அழகாய்க் காக்கின்றோம் உரைக்கிறோம் பொய்
பழுதே உளது எனக்கண்டும் பொய் யுரைத்து
படுகின்றோம் பாடு! பயனிலை காண்பீர்!
பசேலென்ற அழகுக்கு அடிமையாகி நாம்
பண்பிலாத உறவுகளுக்கும் அடிமையாகி நாம்
நேசமிலா தாரின் போலிக்குள் கட்டுண்டு
நாதியற்றுப் போகின்றோம் மனமே தெளி!
மின்னுவ தெல்லாம் பொன்னாமோ நிலத்தில்
மின்னன்ன பேதையரும் போலி - மண்ணில்
சொன்னவை யொன்று செய்வது மற்றொன்று
சொர்க்கமே அல்ல பூமி நாம்சீராய்த் தெளிவோம்!
-கலைமகன் பைரூஸ் 2013-04-13 5:20
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக