பூக்கள் பூக்கும்படி வேண்டி நின்ற வானமே,
வெள்ளி, 26 ஜூன், 2026
எனது பொற்காலம் | கலைமகன் பைரூஸ்
வெள்ளி, 6 மார்ச், 2026
உன் உதவி எனக்குள்! | இன்ன மஇய ரப்பீ!
'Inna Maiya Rabbi'
ஞாயிறு, 22 பிப்ரவரி, 2026
தமிழே! நீ வாழ்க – தாய்மொழிப் பெருமை கூறும் புதிய கவிதை
“உன்னொளி பரவட்டும் அகிலத்திலென்றும்!” எனத் தொடங்கும் இந்தக் கவிதை, என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து எழுந்த ஒரு மொழிப்பற்று நாதம். தாயின் துதிக்குரலாய் ஒலிக்கும் தமிழின் இனிமையையும், அதன் வரலாற்றுப் பெருமையையும், ஆன்மீக ஆழத்தையும், உலகளாவிய பரப்பையும் ஒரே பாவோசையில் இணைக்க முயன்ற, பன்னாட்டு / சர்வதேச தாய்மொழித்தினத்திற்கான சிறிய இலக்கிய அன்பளிப்பு இது.
ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2025
காஸா குழந்தைகள் | கலைமகன் பைரூஸ்
அப்பா என்ற ஒளி அணைந்திட,
அம்மா என்ற கண் நீரால் மூழ்கிட,
உணவின் வாசமின்றி உழலும்
உயிர்கள் – குழந்தை முகங்கள்!
சூரியன் காய்ந்தாலும் சிரிக்கவில்லை,
சந்திரன் வந்தாலும் மினுக்கவில்லை,
பொம்மை என்பதாய் கல்லைக் கொட்டி,
பசி என்பதைக் காற்றில் மறைத்துக் கொண்டது.
சனி, 30 ஆகஸ்ட், 2025
மருந்தகத்தின் கண்ணீர் விலை - கலைமகன் பைரூஸ்
மருந்தகத்தின் கண்ணீர் விலை
மருத்துவம் என்றாலே நம்பிக்கை எனும் நதி,
மருந்தகம் என்றாலே உயிர்க்கு ஒளி தரும் சுடர்...
ஆனால் இன்று –
அந்த நதி வணிகம் ஆனது,
அந்த சுடர் பணம் கவரும் பிசாசானது.
சின்ன காய்ச்சலுக்கும் –
திங்கள், 4 ஆகஸ்ட், 2025
இரவின் நிறம் | மனங்களைச் சல்லடையாக்கிய நிகழ்வின் நிழல் | கலைமகன் பைரூஸ்
இரவின் நிறம் சிவப்பு
✍️ கவிதை வடிவம் – கலைமகன் பைரூஸ்
இரவின் நிறம் சிவப்பு,
இமைகளை வெட்டிய ஒரு பதட்ட நொடி.
03–08–1990...
நாள் ஒரு துவக்கம்,
முடிவின்றிப் பிழைக்கும் நினைவுகள்.
மஹ்ரிப் ஒலியின் பிறகு,
மோட்சக் குரலில் தோன்றிய
மௌன சத்தங்களின் பயணம்…
ஜவ்பர், ஜுனைதீன், ஆரிப் – அன்ஸார்...
பள்ளிவாயில் படிக்கட்டில் –
காலத்தின் கணக்கின்றி உரையாடல்கள்...
வியாழன், 31 ஜூலை, 2025
நானிருப்பேன் அன்றும்! - கலைமகன் பைரூஸ்
நானிருப்பேன் அன்றும்!
இன்னும் ஒரு தலைமுறையாகும் போது இவன் யாரோ? என்று என் படத்தைப் பார்த்து என் தலைமுறை கேட்க முயலும்? அப்போது இவன் அவன்தான் என எனது உயிர்மூச்சுச் சொற்கள் என்னைச் சொல்லும்...
திங்கள், 28 ஏப்ரல், 2025
பள்ளிகள் காய்ந்து போகின்றன... அங்கலாய்க்கிறேன் நான்!
வியாழன், 9 பிப்ரவரி, 2023
உழைக்கும் கைகளே நாட்டின் கண்கள் | கலைமகன் பைரூஸ்
ஈழ மண்வாசம் வீசும் நேரம்
எங்கள் நெஞ்சங்கள் தீபம் ஏறும்;
இருள் கடந்திடும் இனிய காலம்
இன்று நாமெல்லாம் சேர்ந்து செய்வோம்.





