It கலைமகன் கவிதைகள்: கூழாங்கற்கள் எரிகற்களாக முன்...!

சனி, 24 நவம்பர், 2012

கூழாங்கற்கள் எரிகற்களாக முன்...!

Monday, November 19, 2012



ஏ எகூதிகளே!
சிறுவர் நாம் உமக்குச்செய்த
கொடுமைகள் தான் என்ன?
உணவைத் தட்டிப் பறித்தோமா
இல்லை
உம் உணவில் மண்ணைவாரி
நாம் போட்டோமா?
என்ன கொடுமை நாம்செய்தோம்?
இப்படி  நாய்களைக் கொல்வதுபோல்
எங்களைக் கொன்று குவிக்கிறாய்நீ?
எமது மண்ணில் உள்ள
பச்சோந்திகளுடன் நீ இணைந்து
எமக்குச் செய்யும் அநியாயங்களை
கண்டுகொள்ள அராபியச் சமுதாயம்
விழித்துக் கொள்ளாது என்று
நீ மார்தட்டுகிறாய்!
வேட்டு மத்தளம் கொட்டுகிறாய்!
ஏ எகூதியே!
கூட்டுச்சேர்ந்துள்ள எங்கள்
சதிவலைகளே!
நாங்கள் உங்களிடம்
என்ன கேட்டோம்
மண்ணா – பொன்னா?
எங்கள் மண்ணில்
எங்கள் காஸாவில்
நாங்கள் வாழ்வது
நரமாமிசவுண்ணிகள் உங்களுக்கு
பிடிக்கவில்லையா?
தாய் – பிள்ளை
கணவன் – மனைவி
ஆசைகள் பலசுமந்த
கன்னிகள் என்றும் நீபாராமல்
வேசிமகனின்  வேலைசெய்கிறாய்!
முக்காட்டுக்குள் மறைந்து
மகத்துவமாய் உள்ள நம்நங்கைளை
வம்புக்கு இழுக்கின்றாய்!
உன்னுடைய காமப்பசிக்கு
எங்கள்  சகோதரிகள் பலிக்கடாக்களா?
நீயும் சகோதரிகளுடன் பிறந்திருப்பாய்!
ஆனால்,
உனக்குள்  குடிகொண்டிருக்கின்ற
ஆணவமும்
அடாவடித்தனமும்
வக்கிரப்புத்திகளும்
அன்றிலிருந்து  இன்றுவரை
நகமும் சதையுமாக உன்னில்!
ஏ நாசகார எகூதியே!
உங்கள் வெறியாட்டங்கள்
எங்கள் காஸாவில்
அரங்கேறிக்கொண்டிருந்தாலும்
நாங்கள் ஒவ்வொருவராய்
மரணத்தைச்  சவைத்தாலும்
ஷஹீதுகளாக மாறினாலும்
மீண்டும்  மீண்டும்
எங்களில் ஒருவன்
ஒருநாள்  உங்களையெல்லாம்
மின்னலாய் மின்னி
இடியாய் முழங்கி
அதட்டிக் கேட்க வராமலா இருப்பான்!
ஏ வெட்கம்கெட்ட அராபி இஸ்ரவேலா!
எம்மவருக்காய் வேலேந்தவேண்டியநீ
எம் மண்ணுக்காக குரல் தரவேண்டியநீ
சியோனிஸ்டோடு சேர்ந்து
அநியாயங்கள் பல புரிகின்றாயே!
உண்ணிடம் உண்ண உணவு கேட்டோமா?
உடுக்க உடைதானும் கேட்டோமா?
இல்லை
நாம் இறந்தால்
துப்பாக்கி ரவைகளால்
சல்லடையாக்கப்பட்டு
வழிந்தோடும் எமது இரத்தக்கரைகளால்
குழிக்கச்சொன்னோமா?
இல்லை...
எமது சடலங்களை
தகரப்பெட்டியில் கொண்டுபோய்
அடக்கத்தான் சொன்னேமா?
நீ ஒன்றும் செய்ய வேண்டாம்
பச்சோந்தியே!
சேர்ந்து குழிபறிக்கும்
மாபாவியே!
உன் தன்மானத்தை
விட்டுக்கொடுக்காதடா
விட்டுக்கொடுக்காதடா!
நாங்கள்  தினம்தினம்
உருகிவடிகிறோம்....
எங்களுக்காக
வியர்வை சிந்தும் உள்ளங்களை
நாங்கள் காணோம்...!
அராபியன் தானென்று
பசுத்தோல் போர்த்திய புலிகள்
எங்களுக்காக குரல் எழுப்புவதில்லை!
ஏறிட்டும்  பார்ப்பதில்லை!
இதனால்தான் உனக்குத் திமிரா?
எங்கள் இரத்த்த்துளிகள் ஒவ்வொன்றும்
எங்கள் உடற்கூறுகள் ஒவ்வொன்றும்
நாளை
உனைச் சார்ந்தவரிகளிடமும் கேள்விக்கணைகள்
விடும்போது
பதிலின்றித் தத்தளிப்பாய் மாபாவி!
துப்பாக்கி ரவைகள்தான் எங்களுக்கு!
ராவுகள் எங்களுக்கில்லை!
முஸ்லிம்  என்றபேர்தரித்து
வலம் வருவர்களால் ஒன்றும்
எங்களுக்கு ஆவப்போவதில்லை....
இது அறிந்தா நீ
இத்தனை  துன்பங்கள் இழைக்கிறாய்!!
உன் குரல்கள்
உனக்குள்ளேயே ஓய்ந்துவிடும் நாள்
வெகுதூரத்தில்  இல்லை!
எங்கள் கூழாங்கற்கள்
வலுவிழந்த தாய் நீ நினைக்கிறாய்!
நிச்சயம் அவை
தீப்பந்துகளாய் உன்னை
விழுங்கிக்கொள்ளும்!
திருக் கலிமா சொன்ன
ஒரே காரணத்திற்காய் நீ
எமது மண்ணில் உல்லாசமாய்
ஓடித்திரிந்த எம்மை
நீ அழித்துக்கொண்டே இருக்கிறாய்
ஆக்கவும்  அழிக்கவும் வல்லவனின்
அற்புத சக்திகள் அறியாமல்....
எங்கள் ஆத்மாக்கள் சதா
‘லாஇலாஹ இல்ல்ல்லாஹ்’ என்றிருக்கும்!
எங்கள் ஆத்மாக்கள்
பிரியும்போதும் எமது விரல்கள்
காஸாவிற்கு வெற்றியென்றே பிரியும்!
உன்னால் ஒன்றும் ஆட்டமுடியாது!
எங்கள் இருதயங்கள்
லப்டப் லப்டப் என்று அடித்துக்கொள்ளாது
‘யா காஸா’ என்றுதான் அடித்துக்கொள்ளும்
‘அழிப்பான் இறைவன்’ என்றுதான்
அடித்துக்கொள்ளும்!
நாங்கள் ஷஹீத்கள் ஆகின்றோம்!
எங்களுக்குப் பிரார்த்தனைகள்
செய்ய நல்ல ஆத்மாக்களும்
உண்டு என்ற நம்பிக்கையில்....!
உன்னால் இரத்தக்கரைளைக் கண்டு
மகிழத்தான்  முடியும்!
எங்களுக்கு
சுவனத்து சுகந்தத்தை
அனுபவிக்க இயலும்!
ஏ கெட்ட ஆத்மாவே!
உன்  அடாவடித்தனத்தை அழித்து
எம்மண்ணில்
எம் காஸாவில் நாம்
வாழ மட்டும் விட்டுவிடு!
எங்கள் கூழாங்கற்கள்
எரிகற்களாக மாறமுன்.....!

- கலைமகன்பைரூஸ்
2012/11/20 11:13
நன்றி:
http://www.jaffnamuslim.com/2012/11/blog-post_246.html

கருத்துரைகள்: 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக