It கலைமகன் கவிதைகள்: தீபத்து ஒளியாக ஒளிரவேண்டும் மனம்!

திங்கள், 12 நவம்பர், 2012

தீபத்து ஒளியாக ஒளிரவேண்டும் மனம்!

 
தீபத்து ஒளியாக ஒளிரவேண்டும் மனம்!
 =========== -கலைமகன்  பைரூஸ்
உங்களிடமிருந்து ஒரு வாழ்த்தை எதிர்பார்த்தல் என்பது 

நீங்கள் என்னிடமிருந்து எதிர்பார்த்த வாழ்த்துக்களை 
நீண்ட பிரயத்தனம் மத்தியில் சேமிக்கத் தொடங்கியது 
மனது ..என்னவோ தெரியவில்லை 
உயிரிலிருந்து ஏதோ இறங்குவதை போல 
வாழ்த்துக்கள் ஒவ்வொன்றும் இறங்கி வந்தது 
பாதி பாதியாக உடைந்து வீழ்ந்த சொற்களில் இருந்து 
கவிதையை உயிர்ப்பித்தல் எவ்வளவு கடினமோ 
அதன் நிலையில் உங்களை உணர்வுக்குள் இறைத்தல் என்பது 
அத்தனை வலியது .இருந்தும் நகர்கிறது 
கொடிய வார்த்தைகளின் இறுக்கங்கள் தளர்கிறது 
நிலா தகித்துருகி வீழும் ஒளியில் தீபங்கள் ஒளிர்கிறது 

உங்களிடமிருந்து ஒரு வாழ்த்தை எதிர்பார்த்தல் என்பது 
கவிதை நயத்தல் போன்றது 
இனிப்பானது இனிக்கின்றது இனிக்கும் ..!!
தீபங்கள் ரசிக்க மட்டுமல்ல ...!!

இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள் நண்பர்களே
தீபத்து ஒளியாக ஒளிரவேண்டும் மனம்!
தீயவைகள் அழிந்தொழிய வேண்டும்!
சாபங்கள் தரணியினின் ஒழியவேண்டும்!
சந்ததம் போரின்றி வாழவேண்டும்!

வாழ்வினில் கண்டிட்ட பலஅகவைகள்
வடிவாகக் கண்டது தீபங்கள்மட்டுந்தான்!
சூழ்கலி நீங்கி சுடர்ஒளிபெற்று - பாவம்
சுற்றிவீசிட தீபத்திருநாள் வேண்டும்!

சாதிகள் நிலத்தினின்று நீங்கிட நாம்
சமத்துவமாய் ஓரணி நின்றிட வேண்டும்!
போதைதரும் இனவாதம் எரித்திங்கு
புகழோங்க நல்லன செய்திடல் வேண்டும்!

மாசிலாதார் மனங்கமழ வேண்டும்
மடமைகள் நாளுங் கழிந்திட வேண்டும்
ஊசிமேனின்றேனும் உண்மைக்காய்
உயிர்பிரிந்திடினும் நல்லன ஆற்றவேண்டும்!

மலர்ந்திடும் தீபத்திருநாளில் வையகம்
மணந்தெங்கும் நல்லனசொல நாமின்று
நிலத்தினின் நல்லன ஆற்ற வேண்டும் - எம்மில்
நிலைத்துள அசுர குணத்தை அழிக்க வேண்டும்!

புலர்ந்திட வுன்னும் தீபத்திருநாளன்று
புலகாங்கிதம் தாமடைந்து மக்கள்
எல்லீரும் நல்லீராய் நிலமீதில் நீடுவாழ
எழுத்தறியா அடியேன்யான் வாழ்த்துதிர்த்தேன்!

-தமிழன்புடன் கலைமகன் பைரூஸ்
2012/11/12 இரவு 10:50


  • ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா மலர்ந்திடும் தீபத்திருநாளில் வையகம்
    மணந்தெங்கும் நல்லனசொல நாமின்று
    நிலத்தினின் நல்லன ஆற்ற வேண்டும் - எம்மில்
    நிலைத்துள அசுர குணத்தை அழிக்க வேண்டும்!
    ***** அற்புதமான வாழ்த்து!! எளிமையான சொல்லாட்சி! இனிமையான நடை!! வாழ்த்துக்கள்!!
    about a minute ago ·  2012/11/12

    11:45pm
    Sujeethan Yogarasa போதைதரும் இனவாதம் எரித்திங்கு
    புகழோங்க நல்லன செய்திடல் வேண்டும்!ஊசிமேனின்றேனும் உண்மைக்காய்
    உயிர்பிரிந்திடினும் நல்லன ஆற்றவேண்டும்!
    ellaame nalla sinthanai....nalla kavi varikal anna
    gread anna - Sujeethan Yogarasa 2012/12/11




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக