It It கலைமகன் கவிதைகள்: மானங்கெட்ட மனிதன் உனைப் போலுண்டா பாரில்? Meta Tag Generator Tool By digitalyworld.in Instructions: Simply copy the following lines of code and insert them Between the and tags in your HTML Document. Enjoy from digitalyworld.in

ஞாயிறு, 25 நவம்பர், 2012

மானங்கெட்ட மனிதன் உனைப் போலுண்டா பாரில்?

மானங்கெட்ட மனிதன்
உனைப் போலுண்டா பாரில்?
-கலைமகன் பைரூஸ்

எல்லாமும் தமதாக்கி எண்ணெய்வளங்கொண்டு
ஏற்றமிலாக் காரியங்கள் தாம்புரியும்
எட்டப்பர் காரியங்கள் தாம்புரியும்
மத்தியகிழக்குத் தனவான்களே!
அறாபியன் எனும் பெயர்தரித்த கூனனே!


நாசங்கள் தான்விளைப்பாருடனிணைந்து
ஆத்திகன் நீ நாத்திகனாய்மாறி
எல்லாமும் நாம் இழந்து நடுத்தெருவில்நிற்க
முதலைக் கண்ணீர் தானும் விடுகிறாயா
இல்லை - அதுவும் இல்லை...!
ஆடு நனைகிறதாய்க் கூறி
ஓணாய் அழுவதாய்
பாசாங்கல்லவா
செய்கின்றாய்!

இஸ்லாம் பெண்கள் எங்களுக்கு
ஆண்கள் உங்களுக்குச்
சரிசமவுரிமை தந்திட்டபோதும்
தட்டிப் பறிக்கின்றீர்?
இருட்டறைக்குள் எங்களை வைத்து
எங்கள் ஆசாபாசங்களை
கொலை செய்கிறீர்கள்....!
அறாபியன் என்ற முத்திரை தரித்து!



இன்று
எங்கள் காஸா பற்றி எரிகிறது
முதலைக் கண்ணீர் வடிப்போர்
எட்டுத் திக்குகளிலும்
வேடிக்கை பார்த்து
வேட்டுச் சத்தமாய்
சிரிப்பொலியை கொளுத்துகிறார்கள்!

எங்கள் குழந்தைகளின்
வயிற்றிலிருந்து குடல் வெளியே தொங்க
கால்கள் சல்லடையாக்கப்பட
கர்ப்பிணித் தாய்மாரின்
கருவறையிலிருந்து 'ஸூர்'ஊதப்படாமலேயே
சிசுக்கள் கருச்சிதைவு செய்யப்பட்டு
பர்தாவுக்குள்
பத்திரமாய் வாழும்
கன்னியர்களின் கன்னிகள் கிழிக்கப்பட்டு
'ஷஹீத்'களின் உடல்களில்
'பூட்ஸ்' கால்கள் தரிக்கப்பட்டு
கழுத்து நெறிப்புக்கள் பலவாறாய்

இத்தனையும் சொல்லுங்கால்
இரத்த நாளம் வெடிக்காத குறைஎம்மில்..!
கடல்மீதுள்ள உப்பைத்தான் காண்கிறீர்கள்
எங்கள் விழித்திரையிலிருந்து வீழ்கின்ற
காரவுப்பின் நிலை உங்களுக்கெங்கே
தெளிவாகத் தெரியப் போகிறது!
முகமூடிகள் தறித்தவர்கள் நீங்கள் அல்லவா?

அல்லாஹ்வின் நாமத்தைச் சதாவும்
உச்சரிப்பதாய் சொல்லும் நீங்கள்
நச்சரிப்பல்லவா செய்கிறீர்கள்?
ஆளுக்குப் பெரிய தாடியும்
தலைப்பாகையும் அணிந்து
முஸ்லிம் என்று அடையாளம் காட்டுகிறீர்கள்
எங்கள் இரத்தக்கரைகளில்
உங்களுக்கு சுயலாபம் அதிகம் இருப்பதால்
சுயத்தை இழந்துவிடுகிறீர்கள்...!
வெட்கமா இல்லை உங்களுக்கு?

உங்களுக்கு ஆண்மையி்ல்லை என்பது
பெண்கள் எங்களுக்குத் தெரிந்துவிட்டது
நீங்கள் படைத்தவனுக்காய்
தலைசாய்ப்பதாய்க்கூறி
சாத்தான்களுக்குத் தலைவணங்குகிறீர்கள்!
வெட்கம் கெட்ட மானுடன் என்பதைக்காட்டி
நாங்கள்
பெண்கள்தாம்!
உங்களைப் போல் தரங்கெட்டு
மாற்றானிடம் மதிப்பும் மரியாதையும் பெற்றிட
தலைசாய்க்க மாட்டோம்
எம்மைப் பீராங்கள் சல்லடை செய்ய வந்தாலும்
பார்தாக்களுடன்
நெஞ்சுநிமிர்த்தி நிற்போம் நாம்!
பெண்மை எங்களுக்குள் இருக்கின்றன!
பெருமையும் இருக்கிறது
நாங்கள் தலை நிமிர்ந்துநிற்பதால்!

ஏ... பச்சோந்திகளே!
எங்கள் பிஞ்சுக் குழந்தைகளும்
பெரியவர்களும்
கன்னிகளும்
விதவைகளும் கூட.....
'ஷஹீதாகும் அந்த நேரம்கூட
இருவிரல்களை நீட்டி
'எங்களுக்கு வெற்றி நிச்சயம்'
என்றே மடிகின்றனர்..!

உங்களால் எதுவும் ஆகாது
போலி வேசம் தரித்த
பச்சோந்திகள் நீங்கள்!
வெட்கம்கெட்ட எகூதியுடன் சேர்ந்து
ஒன்றாய் புரியாணி சாப்பிடத்தான்
நீங்கள் இலாயிக்கு!

நாங்கள்
கொத்துரொட்டி போடுங்கால்
நீங்களும் அல்லவா
கொத்தப்படுவீர்கள்....!
உங்கள் பாதாளம்பாயும் பணத்தை
உங்களுடன் வைத்துக்கொள்ளுங்கள்
எங்களுக்குள் வீரிட்டுப்பாயும்
சக்திகளால் நாங்களே
எங்களை காத்துக்கொள்வோம்
இறையருளால்....!

மாபாவிகாள்......!

2012/11/15 இரவு 7:46

நன்றி:
http://nidurseasons.blogspot.in/2012/11/blog-post_25.html


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக