It கலைமகன் கவிதைகள்: முகவரிகள்!

புதன், 7 நவம்பர், 2012

முகவரிகள்!


முகவரிகள்!
-கலைமகன் பைரூஸ்

விண்ணைப் படைத்து
வடிவாய் மானுடனைப் படைத்து
மண்ணின்கண் மாசிலாதன படைத்து
மகிமைசெய்திடும் படைப்பாளனின்
முகவரியைத் தேடுவார் ஆரின்று?

அன்பொடு அன்புசேர்ந்து
அன்பினைக் கண்டிட
அன்பாய்ச்சேர்ந்து
அழுகுரல்கேட்டிட எண்ணியும்
டெங்கு நுளம்பு கடித்திட்டாலும்
எது ஏதுசெய்திட்டாலும்
அவற்றை
ஏறிட்டும் பாராது
குழந்தையின் சுகத்திற்காய்
மகவின் சுகத்திற்காய்
அல்லும் பகலும் கண்விழித்தவளின்
வியர்வை இரத்தம் சிந்தியவனின்
முகவரி தேடுவார் சிலரே!
நம்மில் சிலரே!

தம்மை உருக்கி
தாம் உருக்குலைந்து
மீள மீள எழுந்து
நல்ல கல்விப்பாலீந்து
பின்
நல்லார் தோன்றிட
பாடாய்ப்படும் நல்லாரின்
முகவரியை நினைத்துப் பார்ப்பார்
எத்தனை பேர் நம்மில் இன்று?
எத்தனைபேர் நம்மில் இன்று?

வெட்கம்கெட்ட கைக்கூலி எடுத்து
வாழ்வுகொடுப்பதாய்  சீராய்ச்சொல்லி
நட்டாற்றில் விடும் நயவஞ்சகர்கள்
எத்தனைபேர் நம்மில் இன்று....!
நடந்துவந்த பாதை ஏதென்ற்றியாது
முகவரியுந் தெரியாது
வெறும் நடையன்களோடு
அங்குமிங்குமாய்....!

ஏறிவிட ஏணியாய்நின்ற
எத்தனையோ நல்லாரை
நானிலம் மறந்தே இன்று
படுகின்ற பாட்டின்போதுமட்டும்
தேடுகின்றதே முகவரி....
இதுதானே உண்மை!

முகவரி யாதென்று தெரியாமல்
முண்டமாய் இன்றுதிரிதற்கு
யார்தான் காரணமோ...?
யார்தான் காரணமோ?
திரும்பிப் பார்த்தால்
தன் நிழல் தன்காதைசொல்லும்
இப்படி..... ஆம்  இப்படி...
நல்லாரின் முகவரி நீமறந்தாய்!
இன்று
உன்முகவரியே
உனக்குத் தெரியாதென்று!
---------------------------------------------
 நன்றி: இலண்டன் தமிழ் வானொலி

கருத்துரைகள்:
உங்கள் கவிதையை வாசிக்கும் போதே அதன் இனிமை தெரிகிறது. இதை ஒலி அமைப்பில் வாசித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன் சேர். 2012/11/08
  • Suraiya Buhary Ungal kavi parri kura varthaikale illai sakothara... Arumai

    பைரூஸ் நன்றாக இருக்கின்றன... தொடர்ந்து எழுதுங்கள்!!
    கவிதைகள் சிறிய வடிவமாக ஆரம்பத்தில் இருந்தால் நல்லது!!
    சிறிதாக ஆனால் கச்சிதமாக இருக்கவேணும்.
    எதனையும் வெளிப்படையாக சொல்லக் கூடாது..
    கன்னிப் பெண்ணைப் போல கண் ஜாடை செய்யவேனும்.
    எழுதுங்கள்  நிறைய எழுதுங்கள்...
    பார்பதற்கு கருத்துகள் தருவதற்கு நான் இருக்கிறேன்..
    வாழ்த்துக்கள்!! வாழ்க வளமுடன்
    அற்புதம்!!
     
    அன்புடன்
    ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா
     A.Sriskantha


    இக்கவிதையை வாசிக்கும் போது மனது ஏனோ வலிக்கிறது .உண்மையை கவிதையில் தந்த சகோதரனுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் . 2012/11/08

    • Munshif Yahya என் முகரியை எனக்கு சொன்னதற்கு நன்றி............ 
      2012/11/09

      KChandra Sekaran நடந்துவந்த பாதையை நினைத்துப் பார்ப்பார் நம்மில் சிலரே!.....திரும்பிப் பார்த்தால்
      தன் நிழல் தன் கதைசொல்லும்....!வாழ்த்துகள்!! 2012/11/19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக